மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆவது ஆண்டை முன்னிட்டு கௌரவிப்பு விழா - செந்தில் தொண்டமான் தெரிவிப்பு

Published By: Digital Desk 2

06 Dec, 2022 | 08:14 PM
image

இந்திய வம்சாவளி தமிழர்களான மலையக மக்கள் இலங்கைக்கு வருகைதந்து 200 ஆவது ஆண்டை முன்னிட்டு விசேட விழா ஒன்றை நடத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் பணிகளை முன்னெடுத்துவருதுடன், இந்த விழாவில் பிரதம அதிநிதியாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை வரழைப்பதற்கான அழைப்பிதழை வழங்கவும் நடவடிக்கையெடுத்துள்ளதாக இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,

1823 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையின் மத்தியமலைநாட்டில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் பணிப்புரிவதற்காக ஆங்கிலேயர்கள் தமிழகத்திலிருந்து மக்களை வரவழைத்துடன் அவர்களை தோட்டங்களில் குடியமர்த்தினர்.

மலையக தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து 200ஆவது ஆண்டை  முன்னிட்டு அதனை கொண்டாட இ.தொ.கா நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதன்போது கலை, கலாசாரம், பண்பாடு, இலக்கியம் மற்றும் பாரம்பரிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வுகளின் ஊடாக மலையக மக்களின் திறமைகளை உலகறிய செய்வது இதன் நோக்காகும்.

இந்த விழாவில் மலையகத் தமிழர்களின் எதிர்கால பயணம் மற்றும் அவர்களுக்கான திட்டங்கள் தொடர்பில் கருத்தாடல்களும் இடம்பெறவுள்ளன.

விழாவுக்கு பிரதம அதிதியாக இந்தியப் பிரதமரை அழைக்க இ.தொ.கா. நடவடிக்கையெடுத்துள்ளதுடன், உலகளாவிய ரீதியில் பல்வேறு தலைவர்களை அழைக்கவும் இ.தொ.கா முடிவுசெய்துள்ளது. விழாவை சிறப்பாக செய்வதற்கான ஏற்பாடுகளை இ.தொ.கா செய்துவருவதாகவும் அறிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14