பாராளுமன்றத்தில் இருக்கும் வெளிநாட்டவரை வெளியேற்ற வேண்டும் - முஜிபுர் ரஹ்மான்

Published By: Digital Desk 2

05 Dec, 2022 | 09:36 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

நாட்டின் சட்டத்தின் பிரகாரம் இரட்டை பிரஜா உரிமை உடையவருக்கு பாராளுமன்றத்தில் இருக்க முடியாது. அதனால்  பாராளுமன்றத்தில் இருக்கும் வெளிநாட்டவரை  வெளியில் போடும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கின்றது. அதனை சபாநாயகர் செய்வார் என எதிர்பார்க்கின்றோம் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (டிச.05) இடம்பெற்ற 2023ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு மற்றும் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே  இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாட்டுக்கு தேவையான சட்டங்களை இயற்றுவது பாராளுமன்றமாகும். அப்படியாயின் அந்த சட்டங்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு எங்கள் அனைவருக்கும் இருக்கின்றது. அவ்வாறு இருந்தும் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை மீறுபவர்கள் சிலர் பாராளுமன்றத்தில் இருக்கின்றனர். அவர்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில் பெரும்பாலானவர்கள் மெளனமாக இருக்கின்றனர். சபாநாயகரும் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றார். இது தொடர்பில் நாங்கள் வெட்கப்படவேண்டும்.

இரட்டை பிரஜா உரிமை உடையவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக முடியாது என 21ஆம் திருத்தம் மூலம் நாங்கள் அனுமதித்துக்கொண்டுள்ளோம். அப்படி இருந்தும் அவ்வாறான உறுப்பினர் ஒருவர் பாராளுமன்றத்தில் இருக்கின்றார். அவர் 2004இல் இருந்து பிரித்தானிய கடவுச்சீட்டு பயன்படுத்தி வருவதை குடிவரவு-குடியகல்வு நாயகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பாராளுமன்ற உறுப்பினர் 2021இல் இராஜதந்திர கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள விண்ணப்பித்திருந்தபோது, இவரின் ஆவணங்களை பரிசோதித்த நிலையில், இவர் இந்த நாட்டு பிரஜர அல்ல என்பதால் இவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்குவது தொடர்பாக குடிவரவு குடியகல்வு திணைக்கள நாயகம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு கடிதம் எழுதி, ஆலோசனை கேட்டிருக்கின்றார். ஆனால் அந்த கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லாமையால் பாராளுமன்ற உறுப்பினருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்க திணைக்களம் மறுத்துள்ளது.

ஆனால்  இந்த பாராளுமன்ற உறுப்பினர் மீண்டும் இராஜதந்திர கடவுச்சீட்டுக்கு விண்ணப்பித்தபோது, 2022 செப்டம்பர் 12ஆம் திகதி குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளது. ஆனால் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நாயகத்தினாலே இது வழங்கப்பட்டிருக்கின்றது. கோத்தாபய ராஜபக்ஷ் தலைமையில் பெற்றுக்கொள்ள முடியாமல் இராஜதந்திர கடவுச்சீட்டை ரணில் விக்ரமசிங்க தலைமையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் பெற்றுக்கொண்டுள்ளார்.

எனவே நாட்டுக்கு சட்டம் இயற்றும் பாராளுமன்ற உறுப்பினரே சட்டத்தை மீறி பாராளுமன்ற உறுப்பினராக இருப்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்வது. அதனால் பாராளுமன்றத்தில் வெளியாளராக இருக்கும் குறித்த உறுப்பினரை வெளியில் போடும் அதிகாரம் சபாநாயகருக்கு இருக்கின்றது. சபாநாயகர் அதனை செய்வார் என எதிர்பார்க்கின்றோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06