(ஆர்.வி.கே.)

மறைந்த தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்தும் முகமாக யாழ்ப்பாணத்திலுள்ள  அனைத்து வர்த்தக நிலையங்களிலும் கறுப்புக் கொடிகள் பறக்கவிடப்பட்டு கடைகள் மூடப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.

மறைந்த தமிழக முதலமைச்சர்  ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செழுத்தும் முகமாக  அனைத்து வர்த்தக நிலையங்களையும் இன்று மதியம்  2 மணியுடன் மூடி கறுப்பு கொடிகளை பறக்க விட்டு  அஞ்சலி செலுத்துமாறு  யாழ் வர்தக சங்கத் தலைவர் அழைப்பு விடுத்திருந்தார். 

அதற்கமைய இன்றைய தினம் யாழ்நகரில் பெரும்பாலான கடைகள் மதியம் 2 மணியளவுடன் பூட்டப்பட்டு துக்கம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.