(ஆர்.ராம், எம்.எம்.மின்ஹாஜ்)

ஆளில்லா விமானங்கள் மூலமே விடுதலை புலிகள்  இயக்கம் அழித்தொழிக்கப்பட்டது. எனவே  அதுபோலவே கஞ்சா பயிரிடும் இடங்களையும் ஆளில்லா விமானங்கள் மூலம் இணங்கண்டு  இல்லாதொழிக்குமாறு ஐ.தே.க.எம்.பி.புத்திக்க பதிரண ஆலோசனை வழங்கினார். 

பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாவுக்கான நேரத்தின் போது மேலதிக கேள்வி எழுப்பும் போதே சட்டம், ஒழுங்கு  அமைச்சர் சாகல ரத்நாயக்கவிடம் குறித்த ஆலோசனையை வழங்கினார். 

புத்திக்க பத்திரண எம்.பி.மேலும் உரையாற்றுகையில்;

எம் அனைவருக்கும் தெரியும் யுத்தத்தின் போது விடுதலை புலிகள் இயக்கத்தை ஆளில்லாத  விமானங்கள் மூலமே புலிகள் இருந்த இடத்தை இணங்கண்டு இயக்கம் அழித்தொழிக்கப்பட்டன. எனவே அதுபோலவே இலங்கையில் கஞ்சா பயிரிடும் இடங்களை ஆளில்லா, விமானங்கள் மூலம் இனங்கண்டு முழுமையாக இல்லாதொழிக்க முடியும் என  ஆலோசனை வழங்கினார்.