நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபை ஊழியர்களினால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணி நிறுத்தப் போராட்டம் தொடரும் என நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைப்பு சபையின் ஒன்றிணைந்த ஊழியர்கள் சம்மேளனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக கொடுப்பனவுகள் ரத்து செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நோக்கில் இந்த தொழில் சங்க போராட்டம் இன்று காலை முதல் மதியம் வரை இடம்பெற்ற போதிலும் தொழில் சங்க பிரதிநிதிகளுக்கும் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இடையே இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியளிக்காத காரணத்தினால் தொழில் சங்க நடவடிக்கைகளை நாடளாவிய ரீதியாக விஸ்தரிப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும், இரவு நேர பணிகளில் இருந்து விலகி இருக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.