இலங்கை ஜனநாயகத்தை கட்டியெழுப்பும் விடயத்தில் விரைவாக செயற்பட்டு வருகின்றமையை சர்வதேச சமூகம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன அங்கீகரித்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் மீன்பிடி மற்றும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையிலிருந்து, ஐரோப்பிய நாடுகளுக்கான மீன்பிடி ஏற்றுமதியானது கடந்த காலங்களில் தடைசெய்யப்பட்டிருந்தது.

இதனால் மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர்.

எனினும் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் குறித்த தடை நீக்கப்பட்டது. இதனால் மீனவர்களுக்கு நன்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த தடையை நீக்குவதற்காக பிரதமர் காரியாலயம்,வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் மீன்பிடித்துறை அமைச்சின் அதிகாரிகள் அயராது உழைத்துள்ளனர்.

இதேவேளை அரசாங்கத்தின் அடுத்த கட்ட எதிர்பார்ப்பு ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை பெறுவதாகும். கூடிய விரைவில் குறித்த எதிர்பார்ப்பும் நிறைவேறும் என அவர் தெரிவித்தார்.