மனித மூளையில் சிப் பொருத்தும் பணிகளை ஆரம்பிக்கும் எலான் மஸ்க்

Published By: Digital Desk 2

03 Dec, 2022 | 02:02 PM
image

மனிதனின் மூளைக்குள் சிப்பை பொருத்தி, அதனை கணினியுடன் இணைத்து, அதன் மூலம் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் விதமான புதிய பரிசோதனையை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.

இந்த சோதனை தற்போது குரங்குகளிடம் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் மனிதர்களிடத்திலும் செய்யப்படவுள்ளது. இதன் மூலம் மனிதன் மனதில் நினைப்பதை கணினி மூலம் செயல்படுத்த முடியும்.

இந்த பரிசோதனை முயற்சிக்கு தேவையான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, தங்களை அனுமதிக்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாகவும் எலான் மஸ்க் கூறியுள்ளார்.

இந்த சோதனையை எலான் மஸ்கின் ஸ்டார்ட் அப் நிறுவனமான நியூராலிங்க் மேற்கொள்ளவுள்ளது.

இன்னும் 6 மாதங்களில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இவ்வாறு பொருத்தப்படும் சிப் ஒரு சிறிய நாணயத்தின் அளவில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, நியூராலிங்க் கடந்த 2021ஆம் ஆண்டு ஒரு வீடியோவை வெளியிட்டது. அந்த வீடியோவில் ஒரு குரங்குக்கு மூளையில் சிப்பை பொருத்தி, வீடியோ கேம் விளையாடியதை பார்க்க முடிந்தது.

அந்த வகையில் தற்போது இந்த சிப் வாயிலாக மனிதர்கள் இழந்த பார்வையை பெற முடியும் என்றும் முதுகுத் தண்டு எலும்பு முறிவு, பக்கவாதத்தால் முழுவதும் ஊனம் அடைந்தவர்களை மறுவாழ்வு செய்வதில் நியூராலிங்க் தொழில்நுட்பம் பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

நியூராலிங்க் நிறுவனத்தின் இந்த சோதனை வெற்றி அடைந்தால் சிப் உதவியுடன் கணினியை கட்டுப்படுத்த முடியும். சிப் பொருத்தப்பட்டவரின் மனதில் நினைக்கும் வேலையை கணினியால் செய்ய முடியும்.

இது தொடர்பாக எலான் மஸ்க் கூறுகையில், ‘நாங்கள் அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்திடம் இது தொடர்பான ஆய்வறிக்கைகளை எழுத்துப்பூர்வமாக சமர்ப்பித்துவிட்டோம். இன்னும் 6 மாதங்களில் மனிதர்களிடம் நியூரோலிங்க் சோதனை தொடங்கும். நாங்கள் மனிதர்கள் மத்தியில் இந்த சோதனையை மேற்கொள்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம்’ என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மனித உரிமைகளை வலுப்படுத்த விரும்பும் இளைஞர்களின்...

2024-03-18 16:04:18
news-image

சமாதானத்தை ஜனநாயகத்தை வலுப்படுத்துவதில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தினையும்...

2024-03-18 11:46:14
news-image

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தும்போது ஒழுக்கவியல் சார்ந்த...

2024-03-15 15:43:14
news-image

டிக்டொக்கை பின்னுக்குத் தள்ளிய இன்ஸ்டாகிராம்

2024-03-11 10:13:06
news-image

மனித மூளையில் ‘சிப்’ ; எலான்...

2024-01-30 13:16:57
news-image

“மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக தரையிறங்கியது :...

2024-01-19 21:59:46
news-image

எதிர்காலத்தை ஆளப்போகும் செயற்கைநுண்ணறிவு

2023-11-22 15:47:57
news-image

வட்ஸ் அப்பில் ஒரே நேரத்தில் இரண்டு...

2023-10-21 12:02:07
news-image

ஸ்னாப் செட்டின் புதிய செயற்கை நுண்ணறிவு...

2023-10-07 11:02:07
news-image

கூகுளுக்கு இன்று வயது 25

2023-09-27 10:36:57
news-image

ஏகத்துவத்தை நோக்கி தொழில்நுட்பத்தில் வேகமாக மாற்றமுறும் ...

2023-09-22 18:33:26
news-image

சமூக வழிகாட்டுதல்கள் பற்றிய விழிப்புணர்வை இலங்கையில்...

2023-08-28 20:48:26