போர்த்துகலை வீழ்த்தி 2 ஆம் சுற்றுக்குள் நுழைந்த தென் கொரியா

Published By: Sethu

03 Dec, 2022 | 10:09 AM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் முதல் சுற்றுப் போட்டியொன்றில் போர்த்துகல் அணியை தோற்கடித்த தென் கொரியா, 2 ஆவது சுற்றுக்கு தகுதி பெற்றது.

கத்தாரின் அல் ரையான் நகரிலுள்ள எட்யூகேசன் சிட்டி அரங்கில்  வெள்ளிக்கிழமை (02) நடைபெற்ற, குழு எச் அணிகளுக்கு இடையிலான இப்போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ தலைமையிலான போர்த்துகல் அணியை சன் ஹேவுங் மின் தலைமையிலான தென் கொரியா 2:1 விகிதத்தில் வென்றது.

போட்டியின் 5 ஆவது நிமிடத்தில் போர்த்துகல் வீரர் ரிக்கார்டோ ஹோர்ட்டோ கோல் புகுத்தினார்.

27 ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின் கிம் யோங்வான் கோல் புகுத்தி கோல் எண்ணிக்கையை சமன் செய்தார். 

எனினும், உபாதை ஈடு நேரத்தின்போது 91 ஆவது நிமிடத்தில் தென் கொரியாவின்  ஹ்வாங் சீசான் அடித்த கோல் தென் கொரியாவை 2:1 விகித்ததில் வெற்ற பெறச் செய்தது. 

இதேவேளை குழு எச்சிலுள்ள உருகுவே – கானா அணிகளுக்கு இடையில் இன்று நடைபெற்ற போட்டியில் உருகுவே 2:0 கோல்கள் விகிதத்தில் வென்றது. 

எனினும் குழு எச் இலிருந்து போர்த்துகலும் தென் கொரியாவும் 2 ஆவது சுற்றுக்குள் நுழைந்தன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41