கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா,சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும் - ஹர்ஷ டி சில்வா

Published By: Digital Desk 5

03 Dec, 2022 | 10:27 AM
image

(இராஜதுரை ஹஷான்,எம்.ஆர்.எம்.வசீம்)

கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும். எத்தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (02) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் உரையாடியதை தொடர்ந்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

கடன் மறுசீரமைப்பு மற்றும் நடைமுறை பிரச்சினைகள் தொடர்பில் உறுப்பினர் குறிப்பிட்ட விடயத்தை ஏற்றுக்கொள்கிறேன். இருப்பினும் கோ ஹோம் சைனா என்பது பொருத்தமற்றது. இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் இந்தியா, சீனா ஆகிய நாடுகளுடன் இணக்கமாக செயற்பட வேண்டும்.

கடன் மறுசீரமைப்பு விவகாரத்தில் எத்தரப்பினருக்கும் அழுத்தம் பிரயோகிக்க முடியாது. ஆகவே இவ்விடயத்தில் முரண்பாடற்ற வகையில் பொறுமையுடன் செயற்பட வேண்டும்  என்றார்.

இதன்போது எழுந்து ஒழுங்கு பிரச்சினையை எழுப்பிய பாராளுமன்ற உறுப்பினர் நான் குறிப்பிட்ட விடயத்தை இணைத்து இவர் குறிப்பிட்ட விடயம் பாரதூரமானது. நாட்டு மக்கள் மத்தியில் தவறான நிலைப்பாட்டை தோற்றுவிக்கும் என்றார்.

இதன்போது உரையாற்றிய சபைக்கு தலைமை தாங்கிய வீரசுமன வீரசுமன வீரசிங்க அவர் உங்களின் பெயரை குறிப்பிட்டு கருத்துரைக்கவில்லை. ஆகவே இதனை ஒழுங்கு பிரச்சினை என்று குறிப்பிட முடியாது என குறிப்பிட்டு சாணக்கியன் இராசமாணிக்கம் உரையாற்ற அனுமதி வழங்கவில்லை.

இதன்போது எழுந்து ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சாணக்கியன் இராசமாணிக்கம் ஆற்றிய உரையை சுட்டிக்காட்டியே பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா கருத்துரைத்தார். ஆகவே ஒரு நபரின் கருத்தை பிறிதொருவர் சுட்டிக்காட்டும் போது உரித்தான நபர் அதனை தெளிவுப்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.

ஹர்ஷ டி சில்வா அமைச்சர் அல்ல அவர் எதிர் தரப்பின் உறுப்பினர் ஆகவே அவர் இவ்விடயத்தில் கருத்து தெரிவிப்பது அநாவசியமானது என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து உரையாற்றிய ஹர்ஷ டி சில்வா பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்த கருத்தை நான் மறுத்து கருத்துரைக்கவில்லை. இரு நாடுகளின் விடயம் தொடர்பில் நான் குறிப்பிட்டேன் என்றார்.

இதன்போது மீண்டும் எழுந்து ஒழுங்கு பிரச்சினை எழுப்பிய சாணக்கியன் இராசமாணிக்கம் ஐக்கிய மக்கள் சக்தி,பொதுஜன பெரமுன.மக்கள் விடுதலை முன்னணி என்பது எனக்கு அவசியமற்றது. நான் அரசியல் பற்றி கருத்துரைக்கவில்லை,நாட்டின் பிரச்சினை குறித்து கருத்துரைத்தேன் என்றார்.

ஆகவே இந்த விவாதத்தை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்,என சபைக்கு தலைமை தாங்கிய வீரசுமன வீரசிங்க பாராளுமன்ற உறுப்பினர்களான ஹர்ஷ டி சில்வா,சாணக்கியன் இராசமாணிக்கம் ஆகியோரை நோக்கி குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58