சேவையின் அவசியம் கருதி பொலிஸ் மா அதிபர் என.கே. இளங்ககோனினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் உயர் அதிகாரிகள் நான்கு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

சாவகச்சேரி தலைமையகத்தில் பிரதான பொலிஸ் பரிசோதகராக கடமையாற்றிய டபிள்யூ.கே.தர்மசேன, பொலிஸ் தலைமையகத்துக்கும் கேகாலை பிரதான பொலிஸ் பரிசோதகர் பீ.எஸ்.மெனிக்கே,சாவகச்சேரிக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

மொரட்டுமுல்லை நிலைய பொறுப்பதிகாரியாக கடமையாற்றிய ஆர்.டி.சி.பிந்து புத்தளத்திற்கும் பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஐ.ஆர்.செனவிரத்ன கல்கிஸையிலிருந்து மொரட்டுமுல்லைக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.