அடிக்கடி கோபப்பட்டால் முகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும்...

Published By: Ponmalar

02 Dec, 2022 | 05:25 PM
image

இயல்பான அழகை மேம்படுத்திக்காட்டுவதே மேக்கப். உங்கள் சரும நிறம், முகவடிவம் போன்றவற்றுக்கு தகுந்தவாறு மேக்கப் செய்துகொள்வது, உங்களுடைய தோற்றத்தை சிறப்பாகக் காட்டும். 

தூசு மற்றும் மாசு மூலம் சருமப் பொலிவு குறையும். எனவே அவற்றை முடிந்தவரை தவிர்க்கவும். வாரத்துக்கு ஒரு முறை வீட்டிலேயே கடலை மா, சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் ரோஜா பன்னீர் கலந்து முகத்தில் பூசி மென்மையாக தேய்த்துக் கழுவவும். இதன்மூலம் சருமத்தில் படிந்திருக்கும் இறந்த செல்கள் நீங்கும். 

குறிப்பிட்ட இடைவெளியில் சிறந்த அழகுக்கலை நிபுணர் மூலம் பேசியல் செய்துகொண்டால் முகப்பொலிவை பாதுகாக்கலாம். 

தொடர்ந்து ஏ.சி அறையில் இருப்பவர்கள் சரும பராமரிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அந்த சூழலில் சருமத்தில் இருக்கும் இயற்கையான எண்ணெய் தன்மை குறைந்து வறட்சி அடையும். எனவே சருமத்தில் அவ்வப்போது மொய்ஸ்சுரைசர் பூசிக்கொள்வது நல்லது. போதுமான தண்ணீர் குடிப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

முகப்பருக்களை கிள்ளாதீர்கள். இதனால் அவை நிரந்தரமான வடுக்களாக மாறிவிடும். வாரம் ஒரு முறை நீராவி பிடிப்பதன் மூலம் சருமத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை வெளியேற்றலாம்.

அடிக்கடி கோபப்படுவது மற்றும் கவலைகொள்வதால் முகத்தில் சுருக்கங்கள் அதிகரிக்கும். எனவே மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்

காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக சாப்பிடுங்கள். சருமப்பொலிவுக்கு விட்டமின் 'சி' மற்றும் 'ஈ' அதிகம் உள்ள உணவுகள் முக்கியமானவை. 

மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். அது சருமத்தின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

எவ்வளவு களைப்பாக இருந்தாலும், தூங்கச் செல்வதற்கு முன்பு மேக்கப்பை நீக்கி, இரவு நேர சரும பராமரிப்பை தவறாமல் செய்யுங்கள். 

முடிந்தவரை இயற்கையான பொருட்களையே சரும பராமரிப்புக்கு பயன்படுத்துங்கள். 

சிறிதளவு ரோஜா இதழ்கள், புதினா மற்றும் வேப்பிலையை தண்ணீரில் போட்டு நன்றாகக் கொதிக்க வையுங்கள். ஆறியபின்பு அந்த நீரை வடிகட்டி ஐஸ் டிரேயில் ஊற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள். அவ்வப்போது இந்த ஐஸ் கட்டியை முகத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்தால் முகப்பொலிவு அதிகரிக்கும். 

ஒளி நிறைந்த கண்கள் அழகை அதிகரிக்கும். இரவு தூக்கம் நிறைவாக இருந்தால் கண்கள் ஒளியோடு இருக்கும். எனவே இரவில் நன்றாகத் தூங்குங்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right