மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராமின் அடக்க சடங்கிற்காக கிடங்கு தோண்டும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பூதவுடலை இன்று மாலை 4.30 மணிக்கு மரீனா கடற்கரையில்  நல்லடக்கம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று இரவு அப்பலோ வைத்தியசாலையில் 11.30 மணியளவில் உயிரிழந்தார். 

அப்பலோ வைத்தியசாலையில் இருந்து ஜெயலலிதா பூதவுடல் போயஸ் கார்டனில் உள்ள அவருடைய இல்லத்துக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு பின்னர் அவரது பூதவுடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது பூதவுடலுக்கு சினிமா பிரபலங்கள், அரசியல் வாதிகள் மற்றும் பொதுமக்கள் என அலை அலையாக திரண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.