தீராத சோகத்தை தந்த டிசம்பர் மாதங்கள்.!

06 Dec, 2016 | 11:33 AM
image

டிசம்பர் மாதம் என்றாலே தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கையில் தீராத சோகத்தை தரக்கூடிய மாதம் என்ற கருத்து ஜெயலலிதாவின் மறைவால் தற்போது மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

இதற்கு கண்கண்ட உதாரணமாக பல துயரச் சம்பவங்களை சொல்லலாம். மக்களிடையே நிலவிவந்த மூடநம்பிக்கையை வேரோடு வீழ்த்த தமிழ்நாட்டில் தோன்றிய ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியார் கடந்த 24-12-1972 அன்று காலமானார்.

இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக பொறுப்புவகித்த ’சக்கரவர்த்தி’ ராஜகோபாலாச்சாரியார் கடந்த 25-12-1972 அன்று காலமானார். தமிழ்நாட்டு மக்களால் ‘மக்கள் திலகம்’ என்று போற்றப்பட்ட அ.தி.மு.க. நிறுவனரும் தமிழ்நாடு முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ராமச்சந்திரன் கடந்த 24-12-1987 அன்று காலமானார்.

அடுத்தடுத்து இந்த பெருந்தலைவர்களை எல்லாம் அள்ளிச்சென்ற டிசம்பர் மாதம், கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்நாட்டை சுழற்றியடித்த ’சுனாமி’ என்ற ஆழிப்பேரலை ஆயிரக்கணக்கான தமிழர்களின் உயிரை சுருட்டி எடுத்துக் கொண்டு சென்றது.

அதேபோல், கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இடைவிடாது பெய்த அடைமழை சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களை வெள்ளக்காடாக்கி பல உயிர்களை பறித்ததுடன், இலட்சக்கணக்கான மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்டது.

தற்போது, மீண்டும் பிறந்துள்ள இம்மாதத்தின் 5 ஆம் திகதியான நேற்றிரவு தமிழ்நாட்டின் ‘பெண் சிங்கம்’ என்று அ.தி.மு.க. தொண்டர்கள் போற்றிக் கொண்டாடிய தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52