ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில் மந்தபோசாக்கு 15 வீதம் - குடும்ப சுகாதார பணியகம்

Published By: Rajeeban

02 Dec, 2022 | 03:20 PM
image

ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில் மந்தபோசாக்கு 15 வீதமாக காணப்படுவதாக சுகாதார அமைச்சின் குடும்ப பணியகம் தெரிவித்துள்ளது.

2022 ஒக்டோபரில் சிறுவர்களின் மானுடவியல் அளவீடுகளின் அடிப்படையில் குடும்ப சுகாதார பணியகம் தயாரித்த அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில் மந்தபோசாக்கு15 வீதமாக அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது.

ஐந்து வயதிற்கு உட்பட்ட 95 வீதமான சிறுவர்களின் நிலைiயை நாங்கள் மதிப்பிட்டுள்ளோம் இது ஒரு சாதனை இதன்போது 15 வீதமான சிறுவர்கள் எதிர்பார்க்கப்படும் எடையை விட குறைவான எடையை கொண்டிருந்தனர் என குடும்ப சுகாதார பணியகத்தின் மருத்துவர் சித்திரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

2021ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது ஐந்து வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்தின்மை அதிகரித்துள்ளமை தெரியவந்துள்ளது,அதேவேளை அதிக எடை மற்றும் உடல் பருமன் ஆகியவற்றில் சிறிது குறைவு காணப்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை பொருளாதார நெருக்கடி நிலைக்கு மத்தியிலும் கிளிநொச்சியின் ஊட்டச்சத்து நிலைமையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து மேலும் ஆராயவேண்டும் எனவும் குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22