ஸ்பெய்னை வீழ்த்திய ஜப்பான் உலகக் கிண்ணத்தில் மிகச் சிறந்த நிலையை அடைவதற்கு குறிவைத்துள்ளது

Published By: Digital Desk 5

02 Dec, 2022 | 09:44 AM
image

(நெவில் அன்தனி)

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் நாட்டிற்காக மிகச் சிறந்த பெறுபேறை பெறுவதற்கு தனது கவனத்தை செலுத்துவதாக  ஜப்பான் பயிற்றுநர் ஹஜ்மே மோரியாசு தெரிவித்தார்.   

ஸ்பெய்னுக்கு எதிராக கலிபா சர்வதேச விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (01) நடைபெற்ற சி குழு உலகக் கிண்ணப் போட்டியில் 2 - 1 என இரண்டாம் சுற்றில் குரோஏஷியாவை 'புளூ சமுராய்' என அழைக்கப்படும் ஜப்பான் சந்திக்கவுள்ளது. எனினும் அதற்கும் அப்பால் தனது அணி  முன்னேற வேண்டும் என மோரியாசு எதிர்பார்க்கிறார்.

நான்கு தடவைகள் உலக சம்பியனான ஜேர்மனியை இந்த வருட உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் தனது குழுவுக்கான ஆரம்பப் போட்டியில் 2 - 1 என்ற கோல்கள் கணக்கில் ஜப்பான் தோல்வி அடையச் செய்திருந்தது.

அந்தத் தோல்வியின் காரணமாகவும் ஸ்பெய்னை விட நிகர கோல்கள் வித்தியாசத்தில் பின்னிலையில் இருந்ததாலும் ஜேர்மானி முதல் சுற்றுடன் நாடு திரும்பவுள்ளது.

மறு பக்கத்தில் ஜப்பான் நான்காவது தடவையாக உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் 2ஆம் சுற்றில் விளையாட தகுதி பெற்றுள்ளது. இதனை விட சிறந்த நிலையான கால் இறுதி வாய்ப்பைப் பெறவேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என மோரியாசு குறிப்பிட்டார்.

'உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் ஜப்பானை சாதனைப் படைக்கச் செய்வதே எனது நோக்கமாகும். கால் இறுதிவரை அல்லது அதற்கும் அப்பால் சென்று ஜப்பான் சிறந்த நிலையை அடைவதைப் பார்க்க விரும்புகிறேன்' என அவர் மேலும் தெரிவித்தார்.

போட்டியின் 11ஆவது நிமிடத்தில்  வலதுபுறத்திலிருந்து அஸ்பிலிகுவேட்டா உயர்வாக பரிமாறிய பந்தை நோக்கி உயரே தாவிய அல்வாரோ மொராட்டா தலையால் முட்டி கோல் போட்டு ஸ்பெய்னை முன்னிலையில் இட்டார்.

எனினும் அதன் பின்னர் ஸ்பெய்ன் அவ்வப்போது தடுமாற்றத்துடன் விளையாடுவதை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக அதன் பந்து பரிமாற்றங்கள் நிச்சயமற்றத் தன்மையைக் கொண்டிருந்தன. ஆனால், ஜப்பான் அதனை முறையாகப் பயன்படுத்திககொள்ளத் தவறியதுடன் முரணான வகையில் முரட்டுத்தனமாக விளையாடி மத்தியஸ்தரின் எச்சரிக்கைக்கு ஆளானது.

போட்டியின் முதலாவது பகுதி நிறைவடைந்தபோது ஸ்பெய்ன் 1 - 0 என்ற கோல் அடிப்படையில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது ஜப்பானின் மாற்று வீரராக களம் புகுந்த ரிட்சு டோவான் அடுத்த 2ஆவது நிமிடத்தில் (48 நி.) ஜப்பான் சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார். ஸ்பெய்னின் பெனல்டி எல்லையில் ஏற்பட்ட தடுமாற்றதைப் பயன்படுத்திக்கொண்ட டோவான்  பந்தை தட்டிப்பறித்து அலாதியான கோல் ஒன்றைப் போட்டு கோல் நிலையை சமப்படுத்தினார்.

மூன்று நிமிடங்கள் கழித்து ஜப்பானின் 2ஆவது கோலிலும்  டோவான்   பங்களிப்பு செய்திருந்தார்.

அவர் பரிமாறிய பந்தைப் பெற்றுக்கொண்ட மிட்டோமா, வேகமாக செயற்பட்டு ஆஓ டனாக்காவுக்கு பந்தை பரிமாற அவர் அதனை கோலாக்கி ஜப்பானை முன்னிலையில் (2 - 1) இட்டார். எனினும் அந்த கோல் வீடியோ உதவி மத்தியஸ்தரின் ஒத்துழைப்புடனேயே அங்கீகரிக்கப்பட்டது.

இந்த கோலினால் தடுமாற்றம் அடைந்த ஸ்பெய்ன் கோல் நிலையை சமப்படுத்துவதற்கு கடுமையாக முயற்சித்தது. ஆனால், பின்களத்தைப் பலப்படுத்திக்கொண்டு விளையாடிய ஜப்பான், எதிரணியின் முயற்சிகளை முறிடித்தது.

இறுதியில் மற்றொரு முன்னாள் உலக சம்பியனை வெற்றிகொண்ட ஜப்பான் 16 அணிகள் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வீராங்கனையை முத்தமிட்ட ஸ்பானிய கால்பந்து சம்மேளன...

2024-03-29 09:43:13
news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35