தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா ஜெயராமின் மறைவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.

“மக்களின் அன்புக்கும் பாசத்திற்கும் தெரிவுசெய்யப்பட்ட ஒரு தலைவராக இருந்தவர் முதல்வர் ஜெயலலிதா, அவரது அன்புக்குரியவர்களுக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன் ” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் அனுதாபத்தை தெரிவித்துள்ளார்.