பாகிஸ்தானுடனான முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து புதிய சாதனைகள்: 110 வருட சாதனையை தகர்த்தது இங்கிலாந்து

Published By: Sethu

01 Dec, 2022 | 06:27 PM
image

பாகிஸ்தானுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான இன்று, இங்கிலாந்து அணி பல உலக சாதனைகளைப் படைத்தது. ஒருநாள் போட்டிப் பாணியில் இங்கிலாந்து வீரர்கள் துடுப்பெடுத்தாடினர். 

பாகிஸ்தானின் ராவல்பிண்டி நகரில் இன்று வியாழக்கிழமை இப்போட்டி ஆரம்பமாகியது.

இங்கிலாந்து குழாமிலுள்ள 14 பேருக்கு நேற்று திடீர் சுகவீனம் ஏற்பட்டதால் இப்போட்டி ஒத்திவைக்கப்படலாம் என்ற அச்சமும் நிலவியது. இப்போட்டியை திட்டமிட்டபடி முன்னெடுத்துச் செல்வதற்கு இருநாடுகளின் கிரிக்கெட் சபைகளும் இன்று காலையில்தான் தீர்மானித்தன. அந்தளவுக்கு இங்கிலாந்து வீரர்களின் உடல்நிலை நேற்று மோசமாக இருந்தது.

ஆனால், இன்று போட்டி ஆரம்பித்தவுடன் பாகிஸ்தானின் அனுபவமற்ற பந்துவீச்சு வரிசையை இங்கிலாந்து வீரர்கள் துவம்சம் செய்தனர்.

இங்கிலாந்து வீர்ரகள் நால்வர் சதங்களைக் குவித்தனர். இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டமுடிவின்போது 4 விக்கெட் இழப்புக்கு 506 ஓட்டங்களைக் குவித்திருந்தது. இவை டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனைகளாகும்.

இதற்குமுன் டெஸ்ட் போட்டியொன்றின் முதல் நாளில் ஓர் அணியும் 500 ஓட்டங்களைக் குவித்தில்லை. இதற்குமுன் முதல் நாளில் அணியொன்றின் நான்கு வீரர்கள் சதம் குவித்ததுமில்லை. 

இதற்குமுன் 1910 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியொன்றின் முதல் நாளில் அவுஸ்திரேலிய அணி 494 ஓட்டங்களைக் குவித்தமையே சாதனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது,

இதேவேளை ஒரு நாளில் 4 வீர்ரகள் சதம் குவித்த சாதனையை இதற்குமுன் இங்கிலாந்து 3 தடவைகளும் இலங்கை ஒரு தடவையும் நிகழ்;த்தியுள்ளது. ஆனால் அவை முதல் நாளில் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஓவர் ஒன்றுக்கு சராசரியாக 6.74 ஓட்டங்களை இங்கிலாந்து குவித்தது.

இங்கிலாந்து ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் ஸாக் க்ராவ்ல 111 பந்துகளில் 122 ஓட்டங்களைக் குவித்தார். 

பேன் டக்கெட் 110 பந்துகளில் 107 ஓட்டங்களைக் குவித்தார்.

ஒலீ போப் 104 பந்துகளில் 108 ஓட்டங்களைக் குவித்தார்.  81 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 101 ஓட்டங்களைக் குவித்தார்.

அணித்தலைவர் பென் ஸ்டோக்ஸ் 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 34 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜோட் ரூட் மாத்திரம் பிரகாசிக்கத் தவறினார். அவர் 31 பந்துகளில் 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களில்ஸஹீத் மஹ்மூத் 160 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்;த்தனார். ஹரீஸ் ரவூப் 78 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மொஹம்மத் அலி 96 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.  இவர்கள் மூவரும் அறிமுக வீரர்கள் ஆவர். 

பாகிஸ்தானின் சௌத் ஷகீல், அஷான் ரஸா, இங்கிலாந்தின் லியாம் லிவிங்ஸ்டோன், வில் ஜெக்ஸ் ஆகியோரும் இப்போட்டி மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு அறிமுகமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது,

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09