மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரியில் மலையக பாரம்பரியத்தை உணர்த்தும் செயற்றிட்ட கண்காட்சி

Published By: Nanthini

01 Dec, 2022 | 07:05 PM
image

ட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட மஸ்கெலியா புனித ஜோசப் கல்லூரி உயர்தர கலைப்பிரிவு மாணவர்களின் செயற்றிட்டமாக இம்முறை சிறப்பு சஞ்சிகை வெளியீடு, மலையக பாரம்பரிய கலைகளின் அரங்கேற்றம், மலையக சமூகத்தின் இருநூறு வருட பூர்த்தியை வரவேற்கும் முகமாக ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சி நிகழ்வுகள் நடைபெற்றன. 

கல்லூரி அதிபர் எஸ்.பி.பரமேஸ்வரன் தலைமையில் ஆசிரியர்களான சு.தவச்செல்வன், மே.செந்திவேல் மற்றும் சுகன்யா கெளசல்யா ஆகியோரின் வழிகாட்டலில் தரம் 13 உயர்தர மாணவர்களால் நடத்தப்பட்ட இந்த நிகழ்வானது பாரதி விழா, மலையகம் 200, செவ்வொளி மலர் வெளியீடு மற்றும் கண்காட்சி ஆகிய நான்கு பிரிவுகளையும் உள்ளடக்கியதாக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை முக்கிய அம்சமாகும். 

இந்நிகழ்வில் அதிதிகளாக கல்வி அமைச்சின் பெருந்தோட்ட பாடசாலைகள் அபிவிருத்தி பணிப்பாளர் சு.முரளிதரன் மற்றும் மலையகத்தின் மூத்த எழுத்தாளர் சாகித்ய ரத்னா மு.சிவலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அதிதிகள் வரவேற்பானது பாரம்பரிய முறைப்படி ஒயிலாட்டம், தப்பிசையோடு  இடம்பெற்றது. 

மேலும், கல்லூரி வளாகத்தில் மலையக பாரம்பரிய கூத்துக் கலையான காமன் கூத்து மாணவர்களால் நிகழ்த்தப்பட்டது.

மலையக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும், நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்களால் பயன்படுத்தப்பட்ட பொருட்கள் மற்றும் மாணவர்களால் வரையப்பட்ட ஓவியங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

சில பொருட்கள் நூறாண்டுகள் கடந்தும் மக்களால் பாதுகாக்கப்பட்டு வருகின்றமை வியப்புக்குரிய விடயமே.

இந்நிலையில் காட்சிப்படுத்தப்பட்ட பாரம்பரிய பொருட்களை சேகரிப்பதில் அந்த மாணவர்களின் முயற்சியும் உழைப்பும் ஆசிரியர்களின் வழிகாட்டலும் வெளிப்பட்டு நிற்கின்றன. 

மலையக மக்கள் அன்றாட வாழ்க்கையில் உபயோகித்த வெண்கல பாத்திரங்கள், இரும்பு மின்னழுத்தி, மின்கலத்தால் இயங்கும் வானொலிகள், மணிக்கடிகாரங்கள், கொதி நீர் கொள்கலன்கள், அலங்காரப் பொருட்கள், குத்து விளக்குகள் என ஏராளமான அம்சங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. 

பொதுவாக உயர்தர மாணவர்களின் செயற்றிட்டத்தை ஒரு பாட அலகாக மட்டும் கடந்து சென்றுவிடாமல், மலையக சமூகத்தின் வரலாற்றையும் தொன்மையையும் வெளிப்படுத்தும் முகமாகவும், அச்சமூகத்தின் இருநூறு வருட பூர்த்தியை வரவேற்கும் விதமாகவும் நேர்த்தியாக இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வின் வெற்றிக்கு பின்னணியாக பாடசாலை சமூகம், மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள், பழைய மாணவர் சங்கம், பெற்றோர்கள் கரம் கோர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெரிய வெள்ளியை முன்னிட்டு யாழ். மரியன்னை...

2024-03-29 15:38:31
news-image

லண்டனில் 'சாஸ்வதம்' உலகளாவிய பாரம்பரிய நாட்டிய...

2024-03-29 12:05:55
news-image

“Shakthi Crown" இசை நிகழ்ச்சி சக்தி...

2024-03-29 09:28:46
news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56