ஜெயலலிதாவின் மறைவையடுத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இன்று பதவியேற்றார்.

ஆளுநர் மாளிகையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப் பிரமாணமும், ரகசியகாப்பு பிரமாணமும் செய்துவைத்தார்.

தமிழக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றதும், 31 அமைச்சர்கள் கூட்டாக பதவியேற்றுக்கொண்டனர். 

பதவியேற்பு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பு ஜெயலலிதாவின் மறைவுக்கு இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 75 நாட்களாக அப்பலோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நேற்றிரவு 11.30 மணிக்கு உயிரிழந்தார்.

ஜெயலலிதாவின் உயிரிழந்தமையினை, அப்பலோ வைத்தியசாலை நிர்வாகம் நள்ளிரவில் அதிகாரபூர்வமாக வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் பதவியேற்றார்.