இந்தியா - லாட்வியா பிரதிநிதிகள் சந்திப்பு: உக்ரைன் மோதலில் இந்தோ - பசுபிக் நிலவரம் குறித்து கருத்துப் பகிர்வு

Published By: Nanthini

01 Dec, 2022 | 04:15 PM
image

(ஏ.என்.ஐ)

ந்தோ பசுபிக், ஐரோப்பிய ஒன்றியம், உக்ரைன் மோதல், ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு பேரவை சீர்திருத்தங்கள் உள்ளிட்ட பலதரப்பு ஒத்துழைப்பு குறித்து 8ஆவது வெளியுறவு அலுவலக ஆலோசனையில் இந்தியாவும் லாட்வியாவும் கலந்துரையாடின.

அரசியல், பொருளாதாரம், வணிகம், தூதரகம் மற்றும் கலாசார இணைப்புகள் உட்பட இருதரப்பு உறவுகளின் முழு வரம்பையும் இருதரப்பும் கவனத்தில் கொண்டன. 

பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகள் குறித்த கருத்துகளும் இதன்போது பரிமாறப்பட்டன.

இந்த கலந்துரையாடலில் இந்தியத் தரப்புக்கு வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் (மேற்கு) சஞ்சய் வர்மா தலைமை தாங்கினார். 

லாட்வியாவின் வெளியுறவு அமைச்சகத்தின் மாநிலச் செயலர் ஆண்ட்ரிஸ் பெல்ஸ் தலைமையில் லாட்வியன் தரப்பு வழிநடத்தப்பட்டது. 

இந்தியாவும் லாட்வியாவும் வரலாற்று மற்றும் கலாசார தொடர்புகளுடன் சுமுகமான 30 ஆண்டுகால இராஜதந்திர உறவுகளை பகிர்ந்துகொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52