ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்த திண்டுக்கல் அதிமுக பிரமுகர் பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

 சென்னை கிரிம்ஸ் வீதியில் உள்ள அப்பலோ வைத்தியசாலையில் கடந்த 75 நாட்களாக சிகிச்சை பெற்று வரும் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. 

மேலும், இன்று அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது என அப்பலோ நிர்வாகம் அறிவித்தது. இந்தத் செய்தியை தொலைக்காட்சியில் பார்த்து கொண்டிருந்த பெரியசாமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே குட்டுப்பட்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரான இவர், குட்டுப்பட்டி அதிமுக கிளை பிரதிநிதியாக இருந்து வந்துள்ளார்.

 ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என அறிந்த இவர் மிகவும் கவலையுடன் காணப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று ஜெயலலிதாவின் உடல் கவலைக்கிடம் என்ற செய்தியை தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த போது , அவரால் ஜெயலலிதா குறித்த செய்தியை தாங்க முடியாமல் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. 

பின்னர், அங்கிருந்து வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்ட போதும்  அவரின் உயிர் பிரிந்துவிட்டதாக வைத்தியர்கள் கூறியுள்ளனர்.