ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு, வீதி  அபிவிருத்தி  அமைச்சர் செந்தில் தொண்டமான் மாகாணத்தின் பதில் முதலமைச்சராக பதவியேற்றார்.

ஆளுநர் அலுவலகத்தில் ஊவாமாகாண ஆளுநர் முன்னிலையில் அமைச்சர் செந்தில் தொண்டமான்  சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஊவா மாகாண வரலாற்றில் தமிழரொருவர் பதில் முதலமைச்சராக பதவியேற்பது இதுவே முதல் தடவையென்பது குறிப்பிடத்தக்கது.