க்ளா ஹேண்ட் எனப்படும் சுண்டு விரல் பாதிப்பிற்குரிய நிவாரண சிகிச்சை

Published By: Digital Desk 5

30 Nov, 2022 | 01:49 PM
image

இன்றைய திகதியில் மின்சாதன பொருட்களை கையாளும் பணியாளர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் கைகளை அதிகளவில் பயன்படுத்தும் பெண்மணிகளுக்கும்  க்ளா ஹேண்ட் ( Claw Hand) எனப்படும் சுண்டுவிரல், மோதிர விரல் உள்ளிட்ட பகுதிகளில் திடீரென்று 'சுருக்'கென வலி ஏற்படும். இதற்கு தற்போது முழுமையான நிவாரண சிகிச்சை கிடைக்கிறது.

எம்மில் பலரும் வாகனம் ஓட்டும் போதோ அல்லது வேறு பணிகளில் ஈடுபட்டிருக்கும் போதோ கை மற்றும் மணிக்கட்டு பகுதியை அதிக அளவில் பயன்படுத்துகிறோம். இந்நிலையில் கழுத்தின் பின்புற பகுதியிலிருந்து கைகளின் இயக்கத்திற்காக அல்நார் நரம்பு எனும் நரம்பும் தொகுதி அமைந்திருக்கிறது. 

இந்த நரம்பு, எம்முடைய முழங்கை மூட்டு பகுதியின் அடிப்பகுதியில் பயணிக்கிறது. இந்த பகுதியில் எதிர்பாராமல் காயம் ஏற்பட்டாலோ அல்லது அடிபட்டாலோ அல்லது அப்பகுதியில் இருக்கும் அல்நார் நரம்பில் சிதைவோ அல்லது சேதமோ ஏற்பட்டாலும், இத்தகைய வலி உண்டாகும். 

சிலர் இதனை எளிதாக கடந்து விடுவர். ஆனால் இதற்கும் உரிய முறையான சிகிச்சையை பெற வேண்டும். இல்லையெனில் சுண்டு விரல், மோதிர விரல் ஆகியவை தன்னுடைய இயல்பான தன்மையை இழந்து விடும்.

வேறு சிலருக்கு Cubital tunnel syndrome, Cervical Spondylosis மற்றும் தொற்றுகளின் காரணமாகவும் இத்தகைய பாதிப்பு உண்டாகும். இத்தகைய வலி அடிக்கடி ஏற்பட்டால்.., உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். அவர்கள் எலக்ட்ரோமயோகிராபி எனப்படும் பரிசோதனையை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிப்பார்கள்.

இதனைத் தொடர்ந்து முதன்மையான நிவாரண சிகிச்சையாக அப்பகுதியில் ஓய்வளிக்கும் வகையிலும், அப்பகுதியில் உள்ள நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் அழுத்தங்களை குறைப்பதற்காகவும், பிரத்யேக கையுறை ஒன்றை அணியுமாறு பரிந்துரைப்பார்கள். 

கூடுதலாக சில பிரத்யேகப் பொருட்களை வழங்கி, அதனூடாக இயன்முறை சிகிச்சையை பின்பற்றுமாறும் அறிவுறுத்துவார்கள்.

இதன் பிறகும் சிலருக்கு வலி குறையவில்லை என்றாலோ அல்லது மீண்டும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டாலோ.. அவர்களுக்கு மருத்துவர்கள் கூடுதலாக சில பரிசோதனைகளை மேற்கொண்டு, அல்நார் நரம்பில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை பிரத்யேக சிகிச்சை மூலம் சீராக்குவார்கள். 

மேலும் அங்குள்ள தசை நார்களில் ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தை நீக்குவார்கள். மிக சிலருக்கு தசை நார் மாற்று சத்திர சிகிச்சையும் மேற்கொண்டு பாதிப்பை சீராக்குவார்கள்.

டொக்டர் கார்த்திகேயன்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29