இங்கிலாந்து, வேல்ஸில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர்: புதிய குடிசன மதிப்பீட்டில் தகவல்

Published By: Sethu

30 Nov, 2022 | 01:07 PM
image

பிரித்தானியாவுக்குட்பட்ட இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினர் ஆகியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. 

நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய குடிசன மதிப்பீட்டு விபரங்களின்படி, இங்கிலாந்து, வேல்ஸில் 50 சதவீதத்துக்கு குறைவானோரே தம்மை கிறிஸ்தவர் என அடையாளப்படுத்தியுள்ளனர். 

பல்கலாசாரத் தன்மையுடைய பிரிட்டனில் மதசார்பற்ற நிலையை நோக்கிய திசையில் இது ஒரு மைல் கல்லாகக் கருதப்படுகிறது.

2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இக்குடிசன மதிப்பீட்டு விபரங்களே தற்போது வெளியாகியுள்ளன.

இதற்குமுன் 2011 ஆம் ஆண்டில் 59.3 சதவீதமானோர்  தம்மை கிறிஸ்தவர் என அடையாளப்படுத்தியிருந்தனர்.

ஆனால் 2021 ஆம் ஆண்டின் புதிய சனத்தொகை கணக்கெடுப்பில்  46.2 சதவீதமானோரே தம்மை கிறிஸ்தவர் என அடையாளப்படுத்தியுள்ளனர். 

பிரிட்டனில் இந்து பிரதமராக ரிஷி சுனாக் பதவியேற்று சுமார் ஒரு மாதம் கடந்த நிலையில் இவ்விபரங்கள் வெளியாகியுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவிக்கையில், முஸ்லிம் சனத்தொகையில் திடீர் அதிகரிப்பை இவ்விபரங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால், மதம் தொடர்பான கேள்விக்கு கிறிஸ்தவத்துக்கு அடுத்ததாக, 'மதம் இல்லை' என்பதே இரண்டாவது ஆகக்கூடுதலாக கிடைத்த பதிலாகும் எனத் தெரிவித்துள்ளது.

யோர்க் பேராயர் ஸ்டீபன் கோட்ரெல் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில், கிறிஸ்தவர்களின் விகிதாசாரம் குறைந்து வருவதில் பெரும் ஆச்சரியம் எதுவுமில்லை எனக் கூறியுள்ளார்.

அதேவேளை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புப் பிரச்சினை மற்றும் ஐரோப்பாவில் யுத்தம் ஆகியவற்றுக்கு முகம் கொடுக்கும் மக்களுக்கு இன்னும் ஆன்மிக வாழ்வாதாரங்கள் தேவைப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52