மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளியை கொல்ல சதி: மருத்துவமனையில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு

Published By: Rajeeban

30 Nov, 2022 | 01:38 PM
image

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு வழக்கின் குற்றவாளி முகமது ஷரீக்கை கொல்ல சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில் ஆட்டோ ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரி (37) காயமடைந்தார். அதில் பயணித்த முகமது ஷரீக் (24) பலத்த‌ தீக்காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள முகமது ஷரீக்குக்கு 8 பேர் அடங்கிய மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் உயிருக்கு ஆபத்தான கட்டத்தை தாண்டி இருந்தாலும், தொடர்ந்து மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பிலேயே இருக்கிறார். இதனால் என் ஐ ஏ அதிகாரிகள் இன்னும் முகமது ஷரீக்கிடம் விசாரணை நடத்தாமல் இருக்கின்றனர்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முகமது ஷரீக்கை கொல்ல தீவிரவாத அமைப்பினர் திட்டமிட்டுள்ளதாக என் ஐ ஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அவர் உடல் நலம் தேறி அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்தால் தீவிரவாத அமைப்புகளின் தொடர்புகள் குறித்த தகவல் வெளியாகும் என்பதால் அந்த அமைப்பினர் இந்த சதிச் செயலை மேற்கொள்ள முடிவெடுத்துள்ளனர்.

இதனால் முகமது ஷரீக் அனுமதிக்கப்பட்டுள்ள மங்களூரு தனியார் மருத்துவமனைக்கு துப்பாக்கி ஏந்திய பொலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையின் அனைத்து நுழைவு வாயில்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமரா, மெட்டல் டிடெக்டர் ஆகியவை பொருத்தப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு வரும் அனைவரையும் பொலிஸார் சோதித்த பிறகே உள்ளே அனு மதிக்கின்றனர்.

மருத்துவர்களுக்கும் பாதுகாப்பு

இதேபோல அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள், செவிலியர்களும் பாதுகாப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர். முகமது ஷரீக் விசாரணை அதிகாரிகளிடம் பேசினால் மட்டுமே மங்களூரு குண்டுவெடிப்பு, அதில் தொடர்புடையவர்கள் யார்? அவர்களின் இலக்கு என்ன என்பது குறித்து தெரியவரும் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52