பக்தி பூர்வமாக இடம்பெற்ற மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கருங்கல் சிற்பக் கற்கோயில் வாஸ்த்து வைபவ ஆரம்ப விழா ( காணொளி இணைப்பு )

Published By: Priyatharshan

05 Dec, 2016 | 10:44 AM
image

இலங்கையின் தலைநகராம் கொழும்பு மாநகரில் தமிழ் மக்கள் செறிந்து வாழும் ‘மயூரபதியில்’ எழுந்தருளியுள்ள கொழும்பு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத் திருப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற திருவருள் கைகூடியுள்ளது.

பெண் தெய்வ வழிபாட்டின் குறியீடாக விளங்கும் கொழும்பு - வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் முக்கியத்துவத்தையும், தலைநகரில் வாழும் தமிழ் மக்களின் வாழ்வியலுடன் இணைந்த அதன் வகிபாகத்தையும் நன்கு உணர்ந்த ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் பெ.சுந்தரலிங்கம், உபதலைவர் த.சிவகுமார், செயலாளர் மு.முருகையா, உப செயலாளர் பெ.சிவகுமார், பொருளாளர் சி.புவனேந்திரராஜா, உப பொருளாளர் மு.ஸ்ரீசெல்வகுமார் மற்றும் அங்கத்தவர்களான க.செல்வரட்ணம், ரா.அசோக்குமார் மற்றும் ரி.தியாகலிங்கம் ஆகியோர் உள்ளடங்கலான குழுவினரின் அயராத முயற்சியின் பயனாக அன்னை கோயில் கொள்ளும் பொருட்டு கருங்கல்லால் ஆலயம் அமைக்கும் சீரிய பணி கடந்த ஆண்டு இறைவன் திருவருளுடன் ஆரம்பிக்கப்பட்டது. 

இதன்பொருட்டு மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயில் பாலஸ்தாபனம் கடந்த 2015 ஆம் ஆண்டு 06 ஆம் திகதி டிசம்பர் மாதம் இடம்பெற்றுஇ கோயில் திருப்பணி வேலைகளுக்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. அத்துடன் கோயிலுக்கான இராஜகோபுரத் திருப்பணிகள் கடந்த ஜூலை மாதம் 24 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. 

அன்னை குடிகொண்டிருக்கும் ஆலயத்தை மிகவும் பிரமாண்டமான முறையில் கருங்கல் கொண்டு திருப்பணிகளை மேற்கொள்ளும் பொருட்டு, ஆலயத் திருப்பணிகளுக்காகத் தேவைப்படுகின்ற கருங்கல் சிற்ப வேலைப்பாடுகள் இந்தியா – செங்கல்பட்டில் நிறைவு பெற்றுள்ள நிலையில், அவற்றில் கால் பங்கு கருங்கற்கள் கடந்த 19.11.2016 – சனிக்கிழமை இலங்கை சுங்கத் திணைக்களத்தின் ஊடான இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுஇ அவை ஆலயத்தை வந்தடைந்தன. அதுமாத்திரமல்லாமல் ஆலய சுற்று மதிலுக்குத் தேவைப்படுகின்ற கருங்கற்கள் சீனாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்டுள்ளதுடன்இ அக்கருங்கங்களும் ஆலயத்தை வந்தடைந்தன. 

மேலும் ஆலயக் கருங்கற் திருப்பணிகளுக்குத் தேவைப்படுகின்ற மிகுதிக் கருங்கற்களையும் கட்டங்கட்டமாக நாட்டுக்குள் கொண்டு வருவதற்கு உரிய நடவடிக்கைகளை ஆலய அறங்காவலர் சபையினர் மேற்கொண்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. 

அவ்வாறு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுஇ திருப்பணிகளில் பயன்படுத்தப்படவுள்ள கருங்கற்களுக்கு விசேட பூசை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டுஇ எடுத்த நற்காரியம் தங்குதடையின்றி நிறைவு பெறும் பொருட்டு விநாயகர் மற்றும் பத்திரகாளி ஆகியோர் வழிபடப்பட்டு குறித்த கருங்கற்கள் கோயில் வளாகத்தில் இறக்கப்பட்டன. 

அவ்வாறு கொண்டுவரப்பட்ட சிற்பாலயத் திருப்பணிக்கான கருங்கற்கள் கொண்டு, சிற்பக் கற்கோயில் வாஸ்த்து வைபவ ஆரம்ப விழா மங்களகரமான துர்முகி வருடம், கார்த்திகைத் திங்கள் 18 ஆம் நாளான  கடந்த சனிக்கிழமை (03.12.2016) வளர்பிறை சதுர்த்தித் திதியும் சித்தயோகமும் உத்தராட நட்சத்திரமும் கூடிய பகல் 11.15 மணி முதல் 12.20 மணி வரையான கும்ப லக்ன சுபமுகூர்த்த வேளையில் இறையாசியுடன் இடம்பெற்றது. 

விநாயகர் வழிபாடு, அம்பாள் அனுக்ஞை, புண்யாகவாசனம், வாஸ்த்து பூஜை, கணபதி பூஜை, மகா பூர்ணாகுதி ஆகியன இடம்பெற்று, பிரதான சிற்பக்கலைக் கருங்கல்லிற்கான பூஜை இடம்பெற்றது. தொடர்ந்து அன்னையின் அருளாசியுடன் கட்டுமான ஆரம்ப வைபவம் இடம்பெற்றதுடன், சிற்பக் கற்கோயில் வாஸ்த்து வைபவ ஆரம்ப விழாவில் பாரத சிற்ப சாஸ்திர வல்லுனர்களான ஸ்தபதிகள் கலந்து கொண்டுஇ சிற்பக் கற்கோயிலுக்கான அமைப்புப் பணிகளையும் தெய்வத் திருவருளுடன் ஆரம்பித்து வைத்தனர்.

இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், துமிந்த திசாநாயக்க (விவசாய அமைச்சர்), ஹர்சா டி சில்வா (பிரதி வெளிவிவகார அமைச்சர்) மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் உட்பட முக்கியஸ்தர்கள், உயரதிகாரிகள் பலர் கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெற்றனர்.

இதேவேளை கொழும்பு – மயூரபதியில் குடிகொண்டிருக்கும் ஸ்ரீ பத்ரகாளி அம்மன் ஆலயத் திருப்பணிகளை மேற்கொள்வதற்கு இடப்பற்றாக்குறை பெரும் தடையாக இருந்து வந்தது. ஏற்கனவே ஆலயம் அமைந்திருந்த இடத்தில் காணப்பட்ட இடப்பற்றாக்குறையைத் தீர்த்துஇ அன்னைக்குக் கோபுரத்துடன் கூடிய கருங்கல் ஆலயத்தை அமைப்பிப்பதற்கு அறங்காவலர் சபை பெருவிருப்பம் கொண்டது. இதன்பொருட்டு ஆலய அறங்காவலர் சபையினர் பல ஆண்டுகளாக விடா முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டிருந்தாலும், அவை பலன் கொடுக்கவில்லை.

அன்னையின் அருட்கடாட்சத்தால் பக்தர்களின் அளவிட முடியாத பக்தியாலும் அதற்கான நேரமும் காலமும் தற்போது கைகூடியுள்ளது. எந்தவொரு தெய்வ காரியமும் எப்பொழுது, யாரால் நடைபெற வேண்டும் என்பது இறைவன் திருவிளையாடலே. அந்தவகையில் கௌரவ  பாட்டாலி சம்பிக்க ரணவக்க (மெகாபொலிஸ் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர்), கௌரவ ரவி கருணாநாயக்க (நிதி அமைச்சர்) மற்றும் திரு. சமன் ஏக்கநாயக்க (பிரதமருக்கான செயலாளர்) ஆகியோரிடம் ஆலய அறங்காவலர் சபையின் தலைவர் பி.சுந்தரலிங்கம் தலைமையிலான குழுவினர் தொடர்பு கொண்டு, அன்னையின் கருங்கல் ஆலயத் திருப்பணியில் முக்கிய தாக்கம் செலுத்தும் இடப்பற்றாக்குறை தொடர்பில் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். 

இப்புனித பணியின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்து கொண்ட கௌரவ  பாட்டாலி சம்பிக்க ரணவக்க, கௌரவ ரவி கருணாநாயக்க மற்றும் திரு. சமன் ஏக்கநாயக்க ஆகியோர், வெள்ளவத்தை ஸ்ரீ மயூராபதி பத்திரகாளி அம்பாள் ஆலய அறங்காவலர் சபையினரின் கோரிக்கைகளைப் புதிதாக ஆட்சி அமைத்திருக்கும் நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கௌரவ பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடம் கொண்டு சென்றதுடன், ஆலயத் திருப்பணிகளில் மிக முக்கிய தாக்கம் செலுத்தும் இடப்பற்றாக்குறை தொடர்பான பிரச்சனைக்கான தீர்வையும் பெற்றுக் கொடுத்தனர். 

இதன் பயனாகஇ ஆலயத்திற்கு அருகில் அமைந்துள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான காணியில் 20 பேர்ச் நிலத்தை ஆலயத் திருப்பணியின் பொருட்டு வழங்குவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. ஆகவே தற்போதைய ஆலய அறங்காவலர் சபையினர் குறித்த காணியை அரசாங்கத்திடம் இருந்து சட்ட ரீதியாகப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். 

ஏற்கனவே ஆலயம் அமைந்திருந்த இடத்தில் அன்னைக்கு கருங்கல் ஆலயத்தைத் திருப்பணி செய்யும் அதேவேளை, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 20 பேர்ச் காணியில் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் பொருட்டு மண்டபம், இரண்டு மாடிகள் கொண்ட அறநெறிப் பாடசாலைகள் மற்றும் தியான மண்டபம் என மிகவும் பிரமாண்டமான திருப்பணிகளை ஆலய அறங்காவலர் சபையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

தற்போது இடம்பெறும் வெள்ளவத்தை மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத் திருப்பணியில் அடியவர்களும் இணைந்து பங்கெடுக்க முடியும். உங்கள் பெயரையோ அன்றி உங்கள் குடும்பத்து அங்கத்தவர்களின் பெயரையோ பொறித்த ஆலய சுற்று மதிலுக்கான கருங்கற்களை கொள்வனவு செய்வதன் ஊடாக ஈடுஇணையற்ற சீரிய பணியான ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்  திருப்பணியில் நீங்களும் இணைந்து  கொள்ள முடியும். 

அதுமாத்திரமல்லாமல் கோயில் இராஜ கோபுரத்திற்கான அத்திபாரக் கல்லைக் கொள்வனவு செய்வதன் ஊடாகவும் பக்தர்கள் தங்கள் திருப்பணியை மேற்கொள்ள முடியும். இது தொடர்பான மேலதிக விபரங்களை ஆலய அலுவலகத்தில் மாத்திரம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ள முடியும். ஆகவே வெள்ளவத்தை மயூராபதி ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய கருங்கல் சிற்பாலயத் திருப்பணிகள் சிறக்க நாமும் வேண்டுவோமாக!   

- உமாச்சந்திரா பிரகாஷ்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாயி பாபா மத்திய நிலைய இஃப்தார்...

2024-03-28 21:26:28
news-image

நுவரெலியாவில் பொலிஸ், சிவில் சமூக பிரதிநிதிகளுக்கு...

2024-03-28 21:32:13
news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56