குரங்கு அம்மை நோயின் பெயர் மாற்றம் - உலக சுகாதார ஸ்தாபனம்

Published By: Digital Desk 3

29 Nov, 2022 | 10:42 AM
image

குரங்கம்மை நோயின் பெயரை எம்பொக்ஸ் ('MPOX') என்று மாற்றுவதற்கு உலக சுகாதார  ஸ்தாபனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

குரங்கம்மை எனப்படும் நோயானது, ஆப்ரிக்க நாடுகளில்தான் அதிகளவில் பரவும். இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவிவிட்டது.

உலக அளவில் 80,000 பேர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டனர். இதன் பரவலை தொடர்ந்து கடந்த ஆகஸ்ட்டில் உலகளாவிய அவசரநிலையை உலக சுகாதார நிறுவனமும் அறிவித்திருந்தது.

பொதுவாக எந்த விலங்குகளிடம் இருந்து, தொற்று பரவுகிறதோ, அந்த நோய்க்கு சம்மந்தப்பட்ட விலங்கின் பெயர் சூட்டுவதுதான் வழக்கம்.

ஆனால், குரங்கம்மை என்ற பெயர் இனவெறியை தூண்டும் வகையில் அமைந்திருப்பதாக உலக சுகாதார  ஸ்தாபனம் கவலை தெரிவித்துள்ளது.

அதனால்தான், அந்த பெயரை வைக்காமல், புது பெயரை சூட்டவும் முடிவு செய்தது. அதன்படி இப்போது எம்பாக்ஸ் (mpox) என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அநேகமாக அடுத்த வருடம் வரை குரங்கம்மை என்ற பெயரும் பயன்படுத்தப்படும் என்றும், அதன்பிறகு வேண்டுமானால் எம்பாக்ஸ் என்று மட்டுமே குறிப்பிடப்படும் என்றும் உலக சுகாதார ஸ்தாபன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நோய்க்கு இன்னொரு பெயர் சூட்டப்பட்டிருப்பது இதுதான் முதல்முறை என்கிறார்கள்.

குரங்கம்மை என்ற பெயர் இனவெறியை தூண்டுவது போல இருக்கும் என்றும், பாரபட்சமாக இருக்கும் என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகளும் வந்துள்ளது.

அதனால்தான், இந்த பெயர் மாற்றப்பட்டுள்ளது. இன்னொரு காரணமும் உள்ளது. வைரஸ் பரவல் மூலம் ஏற்படும் நோய்களுக்கு புவியியல் ரீதியாக பெயர் வைப்பதை தவிர்க்க வேண்டும் என்று பல வருட காலமாகவே கோரிக்கைகளும் எழுந்து வந்தது. அதனால், குரங்கம்மை நோய் மற்றும் வைரஸ்களுக்கு புதிய பெயர் சூட்ட உலக சுகாதார ஸ்தாபனம் முடிவு செய்தது. 

அதன்படி, குரங்கம்மை நோயின் பெயரை எம்பொக்ஸ் ('MPOX') என்று மாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17