சுவிட்சர்லாந்துக்கு எதிராக இறுக்கமான வெற்றியை ஈட்டிய பிரேஸில் 2 ஆம் சுற்றில் விளையாட தகுதி

29 Nov, 2022 | 06:23 AM
image

(நெவில் அன்தனி)

சுவிட்சர்லாந்துக்கு எதிராக ஸ்டேடியம் 974 விளையாட்டரங்கில் திங்கட்கிழமை இரவு (28) நடைபெற்ற எச் குழுவுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் 1 - 0 என்ற கோல் வித்தியாசத்தில் மிகவும் இறுக்கமான வெற்றியை ஈட்டிய பிரேஸில் இரண்டாவது அணியாக நொக் - அவுட் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.

பிரான்ஸ் மாத்திரமே இதற்கு முன்னர் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதி பெற்றிருந்தது.

போட்டியின் 83ஆவது நிமிடத்தில் ஹாவ் வொலி உதை மூலம் கெசிமிரோ போட்ட அலாதியான கோல் பிரேஸிலை அடுத்த சுற்றில் நுழைய வைத்தது.

சுமார் ஒரு மணிநேரம் இரண்டு அணிகளும் மந்த கதியில் விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பொதுவாக மிக வேகமாக விளையாடக்கூடிய இந்த இரண்டு அணிகளும் வெற்றிதோல்வியற்ற முடிவுக்காக விளையாடுகின்றனவோ என சில சந்தர்ப்பங்களில் அவை விளையாடிய விதம் எண்ணவைத்தது.

போட்டியின் 66ஆவது நிமிடத்தில் வினிசியஸ் ஜுனியர் போட்ட கோல் வீடியோ உதவி மத்தியஸ்திரினால் ஓவ் சைடுக்காக நிராகரிக்கப்பட்டது.

அந்த சந்தர்ப்பத்தில் ஓவ் சைட் நிலையிலிருந்து பின்னோக்கி ஓடிய ரிச்சலிசன், பந்தை தட்டிப்பறிக்க முயற்சித்ததால் வினிசியஸ் போட்ட கோல் நிராகரிக்கப்பட்டது.

அதன் பின்னர் மாற்று வீரர்களைக் களம் இறக்கிய பிரேஸில், விளையாட்டிலும் மாற்றத்தை ஏற்படுத்தி எதிர்த்தாடும் உத்தியைப் பிரயோகித்து சுவிட்சர்லாந்து எல்லையை ஆக்கிரமித்த வண்ணம் இருந்தது.

இதன் பலனாக போட்டியின் 83ஆவது நிமிடத்தில் வினிசியஸின் உள்நோக்கி பந்து பரிமாற்றத்தை நன்கு பயன்படுததிக்கொண்ட ரொட்றிகோ மிக வேகமாக செயற்பட்டு கெசிமிரோவை நோக்கி பந்தை பரிமாறனார்.

கெசிமிரோ 'ஹாவ் வொலி உதை மூலம் அற்புதமான கோலைப் போட்டு பிரேஸிலின் வெற்றிக்கு அடிகோலினார்.

உபாதையீடு நேரத்தில் பிரேஸிலுக்கு கோல் போடுவதற்கு இரண்டு வாய்ப்புகள் கிடைத்தன. ஆனால் சுவிட்சர்லாந்தின் பின்கள வீரர்களின் சாமர்த்தியத்தால் அவை தடுக்கப்பட்டன. எனினும் பிரேஸில் 1 - 0 என மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டி அடுத்த சுற்றில் விளையாட தகதிபெற்றது.

இந்த போட்டி முடிவுடன் 2 வெற்றிகளை ஈட்டியுள்ள பிரேஸில் 6 புள்ளிகளுடன் அணிகள் நிலையில் அசைக்க முடியாத முதலாம் இடத்தில் இருக்கிறது. 2ஆம் இடத்திலுளள சுவிட்சர்லாந்து 3 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

சேர்பியாவுடனான கடைசி போட்டியை சுவிட்சர்லாந்து சமப்படுத்திக்கொண்டால் அவ்வணி நிகர கோல் வித்தியாச அடிப்படையில் இரண்டாம் சுற்றில் விளையாட தகுதிபெறும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09