நாட்டை சீரழித்து விட வேண்டாம் : மஹிந்த

Published By: MD.Lucias

05 Dec, 2016 | 09:12 AM
image

நாட்டின் ஒற்றையாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் புதிய அரசியலமைப்புக்கான உப குழுவின் அறிக்கை அமைந்துள்ளது. மாகாண சபைகளுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கும் யோசனைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. மாகாணங்கள் தனி நிர்வாக அலகுகளாக மாற்றும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எனவே குறித்த அறிக்கையின் மிகவும் பாதிப்பான யோசனைகளை அரசியலமைப்பில் உள்ளடக்க கூடாது. இந்தியாவிலும் இலங்கையிலும் இல்லாத கொள்கைகளை பரசீலித்து நாட்டை சீரழித்து விட வேண்டாம் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ எச்சிரிக்கை விடுத்துள்ளார்.

நாடு பிளவுப்படும் என்ற வாக்கியத்தை பயன்படுத்தாமல் நாட்டை பிளவுப்படுத்தும் உப குழு யோசனைகளுக்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு அடிமைப்பட்டுள்ள சுதந்திரக் கட்சியினர் தனது கட்சியின் கொள்கைக்கு துரோகம் இழைக்க கூடாது என்றும் வலியுறுத்தினார்.

புதிய அரசியலமைப்புக்கான  ஆறு உப குழு அறிக்கை தொடர்பில் நேற்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள விசேட அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளாதாவது,

வரவு செலவுத்திட்டத்தினால் வேலைநிறுத்த போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வரும் தருணத்தில் ஜனாதிபதியும் பிரதமரும் அதிகாரபரவலாக்கம் தொடர்பில் பாராளுமன்றத்தில் பேசி வருகின்றனர். ஒற்றையாட்சியையும் பெளத்த தர்மத்திற்கான முன்னுரிமையையும் இரத்து செய்ய மாட்டோம் என அமைச்சர்கள் கூறினாலும் புதிய அரசியலமைப்புக்கான ஆறு உப குழு அறிக்கையை ஆராயந்து பார்த்தால் ஒற்றையாட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பல யோசனை முன்வைக்கப்பட்டுள்ளன. 

மாகாண ஆளுநர்

ஆறு உப குழு யோசனைகள் பிரகாரம் மாகாண ஆளுநர்களுக்கு  உள்ள அதிகாரங்கள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. குறித்த அதிகாரங்கள் மாகாண சபை தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அதுமாத்திரமின்றி மாகாண ஆளுநர் நியமனம் மாகாண முதலமைச்சரே செய்ய வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவ்வாறாயின் மாகாண ஆளுநர்கள் முதலமைச்சருக்கு அடிபணிந்தரவாக மாறிவிடுவார். மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும்  உள்ள தொடர்பை வலுப்படுத்துவதற்கே ஆளுநர் நியமிக்கப்படுகின்றனர். இந்திய ஆட்சி முறைமையிலும் கூட இவ்வாறே குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் மிகவும் பாரதுமைானது. அளுநருக்கான அதிகாரத்தை நீக்கினால் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் ஒற்றையாட்சியாக செயற்பட முடியாது.

அத்துடன் மத்திய அரசுக்கும் மாகாண அரசுக்கும் சம அந்தஸ்து யோசனை முழுமையாக நிராகரிக்கப்பட்டு மாகாணத்தை தனி அதிகார அலகாக மாற்றுவதற்கு யோசிக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர் மாகாண நிர்வாக கட்டமைப்புக்குள் உள்ளடக்கப்படுவார்கள். இவர்களுக்கான நியமனங்கள் மாகாண அரச சேவை ஆணைக்குழு சுயாதீனமாக தீர்மானிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

காணி அதிகாரங்கள்

அதுமாத்திரமின்றி அரச காணிகள் தொடர்பான அதிகாரங்கள் அனைத்தும் மாகாண சபைகளுக்கு வழங்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது அரச காணிகளை உபயோகம் செய்வதாயின் மத்திய அரசானது மாகாண அரசின் அதிகாரத்தை பெற வேண்டும். இந்தியாவில் மாநிலங்கள் விரும்பினாலும் விரும்பாவிடினும் மத்திய அரசு காணிகளை பெற்றுகொள்ள முடியும் . ஆனால் குறித்த யோசனை அவ்வாறு இருக்காது.

பொலிஸ் அதிகாரங்கள்

மேலும் பொலிஸ் அதிகாரங்கள் கூட மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்பிரகாரம் 9 மாகாணங்களுக்கும் 9 பொலிஸ் சேவைகள் பிரிக்கப்படும். இதன்பிரகாரம் குற்றவியல் ,அரச உடைமை தொடர்பான குற்றவியல், முப்படையினர், பாராளுமன்ற உறுப்பினர்கள்,நீதித்துறை மற்றும் அரச அதிகாரிகள் தொடர்பான குற்றவியல், தேர்தல் மற்றும் நோட்டு அச்சிடல் மற்றும் சர்வதேச குற்றவியல் ஆகியன தேசிய பொலிஸ் சேவைக்கு வழங்கப்படுவதுடன் ஏனைய மாகாண பொலிஸ்களுக்கு வழங்கப்படும்.  ஏதாவது விசாரனைகளின் போது தேசிய பொலிஸ் சேவையில் உள்ள பிரிவினை மாற்றம் செய்வதாயின் மாகாண பொலிஸ் ஆணையாளரின் அனுமதி பெறப்பட வேண்டும். மாகாண பொலிஸ் சேவைக்கு தேவையான ஆயுதங்கள் மாகாண பொலிஸாருக்கும் தேவையான முறையிலேயே பெற்றுக்கொள்ளப்படும். அதுமாத்திரமின்றி மொழி மற்றும் தேசியம் அடிப்படையில் மாகாணங்களுக்கிடையில் வேறுப்பாடு காணப்படும். 

அவசரகால சட்டம்

அத்துடன் மூன்று மாத்திற்கோ அல்லது 180 நாட்கள் தொடர்ந்து அவசரகால சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டுமாயின் பாராளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை அனுமதி அவசியமாகும். மேலும் அவசரகால சட்டத்தை விசாரணை செய்து இரத்து செய்யும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இவை அனைத்து நிறைவேற்று அதிகாரத்திற்கு உள்ளடக்கப்பட வேண்டியது. 

மொழி கொள்கை

அத்துடன் மொழி கொள்கையை நோக்கும் போது வடக்கு கிழக்கு பகுதிகளில் நிர்வாக மொழியாக தமிழ் மொழிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டள்ளது. எனினும் அப்பகுதிகளில் சிறுப்பான்மையினத்தவர்களுக்கு சிங்கள மொழி பிரயோகத்திற்கான நீதியான ஒழுங்கு முறைகள் தயாரிப்பதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க அரச மொழி சிங்கள மொழியாகவும் ஏனையோருக்கு தமிழ் மொழி பிரயோகிப்பதற்கு நீதியான ஒழுங்கு முறையை தயாரித்திருந்தார். அதுபோலவே இந்தியாவிலும் அரச மொழியாக இந்தி மொழியாக காணப்பட்ட போதிலும் ஏனைய மொழிகளுக்கு ஒழுங்கு முறைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. எனவே இரு நாட்டு கொள்கைகளிலும் இல்லாத ஒரு விடயத்தை பரசீலித்து நாட்டை சீரழித்து விட வேண்டாம் என எச்சிரிக்கிறேன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02