யாழில் இடம்பெற்ற 3 ஆவது முதலீட்டாளர் கருத்துக்களம்

Published By: Digital Desk 2

28 Nov, 2022 | 05:09 PM
image

இலங்கை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு (இ.பி.ப.ஆ.), கொழும்பு பங்குப் பரிவர்த்தனை  (கொ.ப.ப.) மற்றும் சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனம் (ச.நி.கூ.) ஆகியன அவுஸ்திரேலிய அரசாங்கத்துடன் ஒருங்கிணைந்து இவ்வருடத்திற்கான மூன்றாவது முதலீட்டாளர் கருத்துக்களத்தினை யாழ்ப்பாணத்திலுள்ள டில்கோ சிட்டி ஹோட்டலில் சமீபத்தில் நடாத்தின. 

முதலீட்டாளர் கல்வி மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக உலகளாவிய பிரச்சாரத்தின் குறிக்கோளுக்கு ஏற்ப இந்த கருத்துக்களமானது ஒழுங்குசெய்யப்பட்டது. 

இந்நிகழ்வானது நடைமுறையிலுள்ள மற்றும் சாத்தியமான முதலீட்டாளர்கள் உள்ளடங்கலாக அண்ணளவாக 280 பங்குபற்றுனர்களை கவர்ந்தது. கருத்துக்களமானது முதலீட்டாளர் கல்வி மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு ஆகியவற்றில் மதிப்புமிக்க நுண்ணறிவினை வழங்கியது. 

நம்பிக்கை அலகுப் பொறுப்பாட்சி சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் முன்னாள் ஆலோசகருமான பி.அசோகன் முதலீடு செய்வதிலான  அடிப்படை அறிவு, முதலீட்டுச் செயல்முறை மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் நன்மை தீமைகளை எடுத்துக்கூறியவேளை கொ.ப.ப. இன் யாழ்ப்பாணக் கிளையின் கனிஷ்ட நிறைவேற்று அதிகாரியான .வி.பிரசாந்தன் கொ.ப.ப. இன் மொபைல் செயலியில் விழிப்புணர்வினை உருவாக்கும் ஒரு முன்னிலைப்படுத்தலை நடாத்தினார். 

மேலும், இலங்கை மத்திய வங்கியின், வடமாகாண பிராந்திய முகாமையாளரான, கார்த்திகா நிரோஜன் அவையோருக்கு நிதியியல் அறிவினது முக்கியத்துவத்தில் சில மதிப்புமிக்க நுண்ணறிவினை வழங்கியவேளை எக்யுட்டி நொலேஜ் பார்ட்னர்ஸ் இன் உதவிப் பணிப்பாளர் - முதலீட்டு ஆய்வு, அச்சுதன் ஸ்ரீரங்கன் துறைசார் செயற்திறன் மற்றும் சந்தை வாய்ப்புக்களில் ஒரு பகுப்பாய்வினை முன்னிலைப்படுத்தினார். 

இ.பி.ப.ஆ. இன் பணிப்பாளர் வெளிவாரி உறவுகள் மற்றும் மூலதனச் சந்தைக் கல்வி, துஷார ஜயரத்ன, பி.அசோகன், அச்சுதன் ஸ்ரீரங்கன், கார்த்திகா நிரோஜன் மற்றும் கொ.ப.ப. இன் பி.நி.அ. ரஜீவ பண்டாரநாயக்க ஆகியோரது பங்குபற்றலுடன் ஒரு குழு கலந்துரையாடல் இடம்பெற்றது. இதில் பங்குபற்றுனர்கள் குழு உறுப்பினர்களிடமிருந்து வினாக்களை கேட்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. 

கருத்துக்களத்தின் இறுதியில், பங்குபற்றுனர்கள் பங்குத்தரகு நிறுவனங்களின் முதலீட்டு ஆலோசகர்களையும் நம்பிக்கை அலகுப் பொறுப்பாட்சி முகாமைத்துவக் கம்பனிகளின் பிரதிநிதிகளையும் சந்திப்பதற்கான ஒரு வாய்ப்பும் வழங்கப்பட்டது. 

இவ்வருடத்திற்கான முதலாவது மற்றும் இரண்டாவது முதலீட்டாளர் கருத்துக்களம் ஒக்டோபர் மாதத்தில் முறையே கண்டி மற்றும் காலியில் இடம்பெற்றன. எதிர்வரும் கிழமைகளில் குருணாகலை மற்றும் கொழும்பில், நிதியியல் அறிவின் முக்க்கியத்துவத்தினை எடுத்துக்காட்டும் அதேவேளை முதலீட்டாளர் கல்வி மற்றும் முதலீட்டாளர் பாதுகாப்பு ஆகியவற்றில் விழிப்புணர்வினை உருவாக்கும் நோக்கத்துடன் இரண்டு கருத்துக்களங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகக் கல்வியியல்...

2024-04-18 20:23:36
news-image

பப்புவா நியூ கினி ஆளுநருக்கு ‘சாதனைத்...

2024-04-16 16:18:15
news-image

“தொலைத்த இடத்தில் தேடுவோம்” : மறைந்த...

2024-04-16 13:15:29
news-image

தமிழ்நாடு சேலத்தில் ஆரம்பமாகும் மாபெரும் தமிழ்...

2024-04-11 21:57:37
news-image

50 ஆண்டுகளின் பின் ஊர்காவற்றுறையில் மடு...

2024-04-11 11:59:59
news-image

யாழ். மருதடி விநாயகர் ஆலய சப்பர...

2024-04-11 10:54:49
news-image

தெல்லிப்பழை பொது நூலகத்தில் டிஜிட்டல் மையம்,...

2024-04-11 10:48:25
news-image

நல்லூர் வடக்கு ஸ்ரீ சந்திரசேகரப் பிள்ளையார்...

2024-04-11 10:08:33
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் தீர்த்தோற்சவம் 

2024-04-10 13:34:12
news-image

மூதூர் - கட்டைப்பறிச்சானில் கிழக்கு ஆளுநர்...

2024-04-10 13:22:40
news-image

மாதுமை அம்பாள் உடனுறை திருக்கோணேசப் பெருமானின்...

2024-04-10 12:43:02
news-image

பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலின் புத்தாண்டு...

2024-04-09 15:46:08