மனித உரிமை ஆணைக்குழுவுடன் மோதி நாட்டை முன் கொண்டுசெல்ல முடியாது - லக்ஷ்மன் கிரியெல்ல

Published By: Digital Desk 5

28 Nov, 2022 | 05:04 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

நாடு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றுடன் மாேதிக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. அரசாங்கம் இதனை புரிந்துகொண்டு செயற்படவேண்டும். 

அத்துடன் மக்கள் ஆணை இல்லாத இந்த அரசாங்கத்துக்கு சர்வதேசம் உதவி செய்யப்போவதில்லை என எதிர்க்கட்சி பிரதமகொறடா லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை (28) இடம்பெற்ற 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில்  வெளிநாட்டலுவல்கள் அமைச்சு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு விடயதானங்களுக்கான  நிதி ஒதுக்கீடுகள் குழு நிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

யுத்த இறுதிக்காலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அப்போதைய செயலாளர் பான்கீ மூன் இலங்கைக்கு வந்தார். அபோது ஹிந்த ராஜபக்ஷ் கண்டியில் இருந்தார். அதனால் பான்கீ மூன் கண்டிக்கு சென்று மஹிந்த ராஜபக்ஷ்வை சந்தித்து கலந்துரையாடி இருந்தார். 

இதன்போது அவர், யுத்தத்தின்போது மனித உரிமைகள் மீறப்பட்டிருக்கின்றன.சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டிருக்கின்றன. அதனால் இதுதொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணை ஒன்று மேற்கொள்ள எதிர்பார்க்கின்றோம் என்றார். அதற்கு மஹிந்த ராஜபக்ஷ், ஐக்கிய நாடுகள் சபை விசாரணை மேற்கொள்ளத்தேவையில்லை. 

நாங்கள் செய்வோம் என்றார். ஆனால் அந்த வாக்குறுதியை அவருடைய காலத்தில் நிறைவேற்றவில்லை. பரணகம விசாரணை அறிக்கையை அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். அந்த பரிந்துரைகள் எதனையும் நிறைவேற்றவில்லை.

அதேபோன்று 2013 மற்றும் 2014 ஆகிய இரண்டு வருடங்களும் உள்ளக விசாரணை மேற்கொள்ளுமாறு தெரிவித்து மனித உரிமை பேரவையில் எமக்கு எதிராக பிரேரணை கொண்டுவரப்பட்டது.

இந்த பிரரணையை நிறைவேற்ற தவறினால் 2015இல் இலங்கைக்கு எதிராக பொருளாதார தடை விதிப்பதற்கு தீர்மானிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்த பொருளாதார தடையில் இருந்து தப்பித்துக்கொள்ளவே மஹிந்த ராஜபக்ஷ் முன்கூட்டியே தேர்தலுக்கு சென்றார்.

அத்துடன் 2015இல் நல்லாட்சி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையுடன் நாங்கள் மோதிக்கொள்ள செல்லவில்லை. எமது அதிகாரத்தை நாங்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

அதனால்தான் நாங்களே மனித உரிமை ஆணைக்குழுக்கு சென்று, எமது நாட்டில் விசாரணை மேற்கொள்வதாக உறுதியளித்தோம். ஆனால் அன்று பொதுஜன பெரமுன அதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 

இந்த முறை மனித உரிமை ஆணைக்குழுவில் சரவதேச விசாரணை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயங்கள் காலம் செல்லும்போது மறந்துவிடும் என்றே அரசாங்கம்  நினைத்துக்கொண்டிருக்கின்றது. 

அவ்வாறு இடம்பெறுவதில்லை. இம்முறை சர்வதேச விசாரணைக்கு நிதி ஒதுக்கப்பட்டிருக்கின்றது. அதனால் எமது நாடு தேசிய மட்டத்திலும் சர்வதேச மட்டத்திலும்  பாதிக்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் எமது நாடு பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு ஆயவற்றுடன் மாேதிக்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது. இதனை அரசாங்கம் புரிந்துகொள்வதில்லை. 

இது மக்கள் ஆணை இல்லாத அரசாங்கம். இந்த அரசாங்கம் காலாவதியான பொருளை போன்றது. தொடர்ந்து இந்த அரசாங்கத்துக்கு முன்னுக்கு செல்ல முடியாது. அதனால் புதிய அரசாங்கம் ஒன்று அமைத்துக்கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.

அத்துடன் இந்த அரசாங்கம் தமிழ் முஸ்லிம் மக்களை பகைத்துக்கொண்டது. முஸ்லிம் மக்களை பாரியளவில் நோவினைப்படுத்தியிருந்தது. கொவிட் தொற்று பரவுவதாக அடிப்படையற்ற கருத்ததொன்றை தெரிவித்துக்காெண்டு முஸ்லிம்களின் சடலங்களை எரித்தனர். 

முஸ்லிம் நாடுகள் பகைத்துக்கொண்டது. தற்போது முஸ்லிம் நாடுகளிடம் உதவி கேட்டுச்செல்கின்றனர். அரசாங்கம் வெட்கப்படவேண்டும்.  எனவே அரசாங்கம் எமது நாட்டை அழித்திருக்கின்றது. 

அதனால் அரசாங்கம் தேர்தலுக்கு செல்ல பயப்படுகின்றது. மகா வீரர் என் சொலிக்கொண்டிருந்த தலைவர் ஒட்டுதொத்த நாட்டு மக்களையும் நடுத்தெருவில் விட்டு பின்கதவால் தப்பிச்சென்றார். எந்த எமது நாட்டின் எந்த தலைவரும் இவ்வாறு தப்பிச்செல்ல வில்லை.  

உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு பல்வேறு சூழ்ச்சிகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08