நடிகர் ஜீவன் நடித்திருக்கும் 'பாம்பாட்டம்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

28 Nov, 2022 | 04:57 PM
image

'நான் அவனில்லை', 'திருட்டுப் பயலே' உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் ஜீவன், சிறிய இடைவெளிக்கு பிறகு இரண்டு வேடங்களில் நடித்திருக்கும் 'பாம்பாட்டம்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதனை நடிகர் ஆர்யா தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இயக்குநர் வி. சி. வடிவுடையான் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'பாம்பாட்டம்'. இதில் நடிகர் ஜீவன் இரண்டு வேடத்தில் நடித்திருக்கிறார்.

இவருடன் பொலிவுட் நடிகை மல்லிகா செராவத், நடிகை ரித்திகா சென், யாஷிகா ஆனந்த், சாய் பிரியா, சுமன், துடுப்பாட்ட வீரர் சலீல் அங்கோலா, 'பருத்திவீரன்' சரவணன், ரமேஷ் கண்ணா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

இனியன் ஜே. ஹாரிஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அம்ரீஷ் இசை அமைத்திருக்கிறார். பாம்பை மையமாக வைத்து தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வைத்தியநாதன் பிலிம் கார்டன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் வி. பழனிவேல் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியாகி இருக்கிறது.

இந்த முன்னோட்டத்தில் 120 அடி நீளமுடைய ராட்சத பாம்பு தோன்றி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்துகிறது. இந்த முன்னோட்டத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.

படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,

'' கிபி 1000, 1500, 1980 என மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் திரைக்கதை பயணிக்கிறது. இதற்காக பிரத்யேகமான அரங்குகள் நிர்மாணிக்கப்பட்டு, படப்பிடிப்பு நடைபெற்றது.

படத்தில் இடம்பெறும் கிராபிக்ஸ் காட்சிகள் அனைத்தும் சர்வதேச தரத்தில் அமைந்திருக்கிறது. ஒரு சாம்ராஜ்ஜியத்தின் பரமபத விளையாட்டை முன்னிறுத்தியும், ராஜதந்திர ரீதியாக செயல்படும் சில கதாபாத்திரங்களை மையப்படுத்தியும் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.

காட்சி அமைப்புகள், கலை இயக்கம், கிராபிக்ஸ் தொழில்நுட்பங்கள்... ஆகியவை இப்படத்தில் முழுமையாக பயன்படுத்தப்பட்டிருப்பதால் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும்.

இந்தப் படத்தில் 120 அடி நீளமுடைய ராட்சத பாம்பு ஒன்றும் நடித்திருக்கிறது. இதுவும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35