சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டமைக்கான காரணத்தை விளக்குகிறார் லிட்ரோ தலைவர்

Published By: Digital Desk 3

28 Nov, 2022 | 04:28 PM
image

(எம்.மனோசித்ரா)

டொலர் தட்டுப்பாடு, சீரற்ற காலநிலை உள்ளிட்ட சில காரணிகளால் சமையல் எரிவாயு விநியோகத்தில் ஏற்பட்ட சிக்கலே சில மாகாணங்களில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் காரணமாகும். 

வ்வாறிருப்பினும் தற்போது அவை சீராக்கப்பட்டு டிசம்பர் மாதத்திற்காக மாத்திரம் 34,000 தொன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (28) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

சில மாகாணங்களில் கடந்த சில தினங்களாக சமையல் எரிவாயு விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் மீண்டுமொருமுறை நாடளாவிய ரீதியில் சமையல் எரிவாயுவிற்கு தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளிக்கமாட்டோம்.

செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் சமையல் எரிவாயுவிற்காக கேள்வி பாரியளவில் குறைவடைந்திருந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

எவ்வாறிருப்பினும் உற்சவ காலத்துடன் டிசம்பர் மாதம் முதலாம் திகதியின் பின்னர் சமையல் எரிவாயுவிற்கான கேள்வி , கடந்த ஆகஸ்ட்டில் காணப்பட்டதைப் போன்று அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

டிசம்பர் முதலாம் திகதியிலிருந்து அன்றாட தேவைகளுக்காக நாளாந்தம் ஒரு இலட்சம் சமையல் எரிவாயுவை விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் மாதத்திற்காக மாத்திரம் 34,000 தொன் எரிவாயு முற்பதிவு செய்யப்பட்டுள்ளது. 3,740 தொன் எரிவாயுவை ஏற்றிய 'ஹெட்ரியாஸ்' எனப்படும் முதலாவது கப்பல் 30 ஆம் திகதி (புதன்கிழமை) நாட்டை வந்தடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை 3,700 - 4,000 தொன் எரிவாயுவுடன் கப்பல்கள் தொடர்ந்தும் நாட்டை வந்தடையவுள்ளன.

டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்கள் உற்சவ காலம் என்பதால் சமையல் எரிவாயுவிற்கான கேள்வி அதிகரிக்கும். எனவே தான் கடந்த ஓரிரு வாரங்களாக சில பகுதிகளில் சமையல் எரிவாயுவிற்கான தட்டுப்பாடு ஏற்பட்டது.

அத்தோடு சீரற்ற காலநிலை காரணமாக எரிவாயுவை தரையிறக்குவதிலும் சில சிக்கல்கள் காணப்பட்டன. மேலும் இறக்குமதி செய்வதற்கான டொலரைப் பெற்றுக் கொள்ளல் உள்ளிட்ட காரணிகளே சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படக் காரணமாகும். எனினும் கடந்த காலங்களில் காணப்பட்டதைப் போன்று பாரியளவு தட்டுப்பாடு ஏற்பட ஒருபோதும் இடமளியோம் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59