மக்கள் போராட்டம் ஓயவில்லை என்பதை ராஜபக்ஷக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் - லால்காந்த

Published By: Digital Desk 3

28 Nov, 2022 | 03:02 PM
image

(க.கிஷாந்தன்)

மக்கள் போராட்டம் இன்னும் ஓயவில்லை என்பது ராஜபக்ஷக்கள் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்  என்று ஜே.வி.பியின் அரசியல் குழு உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கே.டி. லால்காந்த தெரிவித்தார்.

கொத்மலை தேர்தல் தொகுதியின் மக்கள் சந்திப்பு கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) கொத்மலை – பூண்டுலோயா பகுதியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியவை வருமாறு,

" நாட்டை விட்டோடிய பசில் ராஜபக்ஷ அண்மையில் நாடு திரும்பினார். பலமான அரசியல் இயக்கத்தை அவர் உருவாக்கபோவதாக சிலர் கூறித்திரிகின்றனர்.

விமான நிலையம் வந்த பசிலுக்கு அவரின் சகாக்கள் மற்றும் அடியாட்களால் அரச அனுசரணையுடன் வரவேற்பளிக்கப்பட்டது.

ஆனால் தான் நாட்டைவிட்டு செல்ல முற்படுகையில் விமான நிலைய ஊழியர்கள் தன்னை எப்படி கவனித்தார்கள் என்பதை பசில் ராஜபக்ஷ மறந்துவிடக்கூடாது. மக்கள் போராட்டம் இன்னமும் ஓயவில்லை. கோரிக்கைகள் அவ்வாறே உள்ளன.

கொள்ளையர்கள், பொருளாதாரத்தை நாசமாக்கியவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் ,கொள்ளையடிக்கப்பட்ட வளங்கள் நாட்டுக்கு கொண்டுவரப்பட வேண்டும் என மக்கள் தொடர்ந்தும் வலியுறுத்திவருகின்றனர். இதையும் பசில் உள்ளிட்டவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அதேவேளை, ஹிட்லர் பற்றி கதைப்பதற்கு முன்னர் 'காற்சட்டை'யை எப்படி சரியாக அணிவது என்பதை ரணில் புரிந்துகொள்ள வேண்டும்." என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37