இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய ஆர்வமாகவுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

Published By: Digital Desk 5

28 Nov, 2022 | 01:58 PM
image

(எம்.மனோசித்ரா)

இலங்கையில் வலுசக்தி துறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான அதிக வாய்ப்புக்கள் காணப்படுவதாகவும் , புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு செய்ய எதிர்பார்த்துள்ளதாகவும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் காலிட் நாசர் அல்அமெரி மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

இக்கலந்துரையாடலின் போது, இலங்கையில் வலுசக்தி துறையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் முதலீடுகளுக்கு அதிக சாத்தியங்கள் இருப்பதாகத் தெரிவித்த தூதுவர் காலித் நாசர் அல்அமெரி, இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு செய்வதில் தமது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

தூதுவருக்குப் பதிலளித்த பிரதமர் தினேஷ் குணவர்தன, புதுப்பிக்கத்தக்க வலுசக்தித் துறைக்கு மேலதிகமாக விவசாயம் மற்றும் தொழில்துறை போன்ற புதிய துறைகளில் முதலீடு செய்வதற்கு ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வாய்ப்புகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

தற்போதைய பொருளாதாரப் பிரச்சினைகளில் இருந்து விரைவாக மீள்வதற்கும் , அபிவிருத்திப் பணிகளுக்காகவும் இலங்கைக்கு வழங்கப்பட்ட ஆதரவு மற்றும் உதவிகளுக்காக ஐக்கிய அரபு எமிரேட்ஸிற்கு பிரதமர் தினேஷ் குணவர்தன இதன் போது நன்றி தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37
news-image

மதுபோதையிலிருந்த நபரால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-18 11:11:00