மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளுக்கு எல்லையிடும் நடவடிக்கை இடம் பெற்றுவருவதாக கரையோரம் பேணல் திணைக்களத்தின் திட்டமிடல் உத்தியோகத்தர் ஜி.மக்கில் தொிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வாவிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையினை தடுக்கும் பொருட்டு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் ஆசோனையுடனும் வழிகாட்டலிலும் கரையோரம் பேணல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் எஸ்.கோகுலதீபனின் கண்கானிப்பின் கீழ் இந்த எல்லையிடும் நடவடிக்கை இடம் பெற்றுவருவதாக அவர் மேலும் கூறினார்.

இபாட் நிறுவனத்தின் உதவியுடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் 9 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 128 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள 360 கிலோ மீற்றர் தூரத்தினைக் கொண்ட அளவில் இந்த எல்லையிடும் நடவடிக்கை இடம் பெற்றுவருகின்றது.

இந்த திட்டத்தின் கீழ் வாவியின் கரையிலிருந்து 3மீற்றருக்கு உயரமான தூண்களை நிறுவி இந்த எல்லைகளை அடையாமிடும் நடவடிக்கை இடம் பெற்றுவருகின்றது.

இந்த நடவடிக்கை மூலம் வாவிகள் சுவீகரிக்கப்படுவதை தடுப்பதுடன் வாவிகளின் கரையோரங்களை பேணவும் முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் காத்தான்குடி வாவியில் எல்லையிட்டு முடிவடைந்துள்ளதாகவும் தொடர்ந்து இந்த நடவடிக்கை இடம் பெற்றுவருவதாகவும் அவர் மேலும் தொிவித்தார்.