பாகிஸ்தானிடமிருந்து தலசீமியா நோய்க்கான மருந்துகள் நன்கொடை

Published By: Digital Desk 5

27 Nov, 2022 | 04:08 PM
image

(எம்.மனோசித்ரா)

பாகிஸ்தானின் பிரபல மருந்து நிறுவனமான ஹைனூன் ஆய்வு கூடத்தினால் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் வாழ்நாள் முழுவதும் பயன்படுத்துவதற்கான மருந்துகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இந்த மருந்துகள் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன.

இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்த மருந்துகள் கையளிக்கப்பட்டதோடு , இவ்வாறு 6 மாதங்களுக்கு ஒரு முறை இலங்கைக்குத் தேவையான மருந்துகளை இலவசமாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

'இவ்வாறான வேலைத்திட்டம் பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால உறவுகளை வலுப்படுத்த உதவும், மேலும் அயல் நாடான இலங்கை இந்த நேரத்தில் எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க உதவுவது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.' என்று ஹைனூன் ஆய்வுகூட நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி வைத்தியர் அதீல் அப்பாஸ் இதன் போது தெரிவித்தார்.

இதன் போது கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல , ' இலங்கை வரலாற்றில் மிகவும் கடினமான காலகட்டத்தை எதிர்கொண்டுள்ளதுடன், இந்த பொருளாதார நெருக்கடி சுகாதாரத்துறையையும் பாதித்துள்ளது.

அத்தியாவசிய மருந்துகள் பலவற்றுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் இவ்வேளையில், பல நட்பு நாடுகளையும் சர்வதேசத்தையும் கொண்டிருப்பது எமக்கு பெரும் பலமாகும்' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10