எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி தொடக்கம் மைக்ரோன் 20 இற்கும் குறைவான  கனவளவை கொண்ட பொலித்தீன் பொதிகள், பைகள் மற்றும் அவை சார்ந்த உற்பத்திகளை பயன்படுத்துதல் மற்றும் விற்பனை செய்வதற்கு தடை செய்யவுள்ளதாக  மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் லால் தர்மசிறி தெரிவித்துள்ளார்.

தடையுத்தரவுகளை மீறி செயல்படுபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் தண்டப்பணமாக ரூ 10,000 விதிக்கப்படுமெனவும் மேலும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் ஆரோக்கியத்தினையும் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கும் நோக்குடனே இவ்வாறான திட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

தற்போதய ஜனாதிபதி சுற்றாடல் அமைச்சராக பதவி வகித்த காலமான கடந்த 2007 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொலித்தீன் பாவனைக்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதும் செயற்பாட்டு ரீதியில் அவை அமுல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.