ரசிகர்களின் கோஷங்கள் தொடர்பாக  ஈக்வடோர், மெக்ஸிக்கோ மீது பீபா விசாரணை

Published By: Sethu

27 Nov, 2022 | 08:55 PM
image

கத்தார் 2022 உலகக் கிண்ண கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் ரசிகர்களின் கோஷங்கள் தொடர்பாக ஈக்;வடோர் மற்றும் மெக்ஸிக்கோ ஆகியவற்றுக்கு எதிராக சர்வதேச கால்பந்தாட்டச் சங்கங்களின் சம்மேளனம் (பீபா) விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இவ்விரு அணிகளுக்கு எதிராகவும் தான் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பீபாவின் ஒழுக்காற்றுக் குழு தெரிவித்துள்ளது.

பீபா ஒழுக்கவிதிக் கோவையின் 13 ஆவது சரத்தின் படி, குற்றம் காணப்பட்டால் மேற்படி அணிகள் ரசிகர்கள் இல்லாத நிலையில் போட்டியொன்றில் விளையாட நேரிடலாம். அல்லது சில அரங்குகளில் விளையாட தடை விpக்கப்படலாம்.

மெக்ஸிக்கோ – போலந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது ரசிகர்கள்  மத்திலிருந்து எழுந்த கோஷங்கள் தொடர்பாக பீபா விசாரிக்கிறது. இப்போட்டி கோல்கள் எதுவுமின்றி முடிவுற்றது. இப்போட்டியில் எழுப்பப்பட்ட சர்ச்சைக்குரிய கோஷங்கள் என்ன என்பது தொடர்பாக பீபா தெரிவிக்கவில்லை.

அதேவேளை, உலகக கிண்ண முதலாவது போட்டியில் கத்தாருடன் ஈக்வடோர் மோதி, 2:0 விகிதத்தில் வென்றது. அப்போட்டியில் ஈக்வடோர் ரசிகர்கள் எழுப்பிய கோஷங்கள் குறித்தும் பீபா விசாரிக்கிறது. இதிலும் விசாரிக்கப்படும் கோஷங்கள் என்ன என்பதை பீபா தெரிவிக்கவில்லை.

ஆனால், அப்போட்டியில் ஈக்வடோர் ரசிகர்கள் எழுப்பிய சர்ச்சைக்குரிய கோஷங்கள் சிலி நாட்டுக்கு எதிரானது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈக்வடோர் வீரரின் தகுதி குறித்த சிலியின் முறைப்பாடு

உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் ஈக்வடோர் சார்பகா விளையாடிய பின்கள வீரரான பைரன் கஸ்டில்லோவுக்கு எதிராக பீபாவிடம் சிலி முறைப்பாடு செய்திருந்த பின்னணியில் ஈக்வடோர் ரசிகர்களால் மேற்படி கோஷங்கள் எழுப்பப்பட்டுள்ளன.

இளம் வீரர் பைரன் கஸ்டில்லோ ஈக்வடோரில் பிறக்காமல் அதன் எல்லையிலுள்ள கொலம்பியாவில் பிறந்தவர் எனவும், அவரின் வயது தொடர்பான ஆவணங்கள் போலியானவை எனவும் சிலி கூறியிருந்தது. 

அதனால் கஸ்டில்லோ ஈக்வடோர் சார்பில் விளையா தகுதியற்றவர், தகுதியற்ற வீரருடன் ஈக்வடோர் விளையாடியதால் அவ்வணிக்கு உலகக் கிண்ண வாய்ப்பு வழங்கப்படக் கூடாது என பீபாவிடம் சிலி முறைப்பாடு செய்தது.

இது தொடர்பாக பீபா விசாரணை நடத்தியது. ஒரு மாத  விசாரணையின் பின்னர் சிலியின் ஆட்சேபத்தை பீபா நிராகரித்தது. 

அதன்பின், பைரன் கஸ்டில்லோ தான் கொலம்பியாவில பிறந்ததாகவும், தனது ஆவணங்கள் திரிபுபடுத்தப்பட்டதாகவும் ஒப்புக்கொள்ளும் உரையாடல் அடங்கிய ஒலிப்பதிவு விபரம் ஊடகங்களில் வெளியாகியது. 

அதையடுத்து இவ்விடயம் தொடர்பில் சிலியும் பெருவும் சுவிட்ஸர்லாந்திலுள்ள சர்வதேச விளையாட்டுப் பிணக்குத் தீர்ப்பாயத்திடமும் முறையிட்டன.

ஆரம்பத்தில் பைரன் கஸ்டில்லோ ஈக்வடோரில் பிறந்தவர் என அந்நாட்டு கால்பந்தாட்டச் சங்கம் கூறியபோதிலும் அவர் கொலம்பியாவின் டுமாக்கோ நகரில் பிறந்தவர் என்பது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது.

எனினும்,, ஒரு நாட்டின் பிரஜை என்பது அந்த நாட்டின் சட்டங்களின் படியானது எனக் கூறிய மேற்படி தீர்ப்பாயம் அவர் ஈக்வடோர் சார்பில் விளையாடத் தகுதியுடையவர் என  கடந்த நவம்பர் 8 ஆம் திகதிஅறிவித்தது. இதனால் உலகக்கிண்ண சுற்றுப்போட்டியில் ஈக்வடோர் விளையாடுவது உறுதிப்படுத்தப்பட்டது.

ஆனால், ஈக்வடோர் பொய்யான ஆவணங்களையும் தகவல்களையும் வழங்கியதால் ஈக்வடோர் கால்பந்தாட்டச் சங்கத்துக்கு 100,000 சுவிஸ் பிராங்க் அபராதமும் அடுத்த உலகக் கி;ண்ண தகுதிச் சுற்றுக்கான ஈக்வடோரின் புள்ளிகளில் 3 புள்ளிகளும் குறைக்கப்பட்டன. 

ஈக்வடோர் கத்தார் 2022 உலகக் கிண்ணத்தில் விளையாடுகின்ற போதிலும், மேலதிக பிரச்சினைகளைத் தவிர்ப்பதற்காக பைரன் கஸ்டில்லோவை உலகக்கிண்ண அணியில் சேர்க்கவில்லை. ஆனால், அவர் 'எமது இதயத்தில் இருகப்பார்' என ஈக்வடோர் பயிற்றுநர் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-20 00:04:00
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41