மெனோபாஸின் பின்னரும் மாதவிடாய் ஏற்படலாமா?

Published By: Robert

04 Dec, 2016 | 10:06 AM
image

பெண்­களின் மாத­விடாயானது நிரந்­த­ர­மாக நிற்கும் பருவம் மெனோபாஸ் என அழைக்­கப்­படும். இவ்­வா­றான மெனோபாஸ் பருவம் ஏற்­படும் வய­தா­னது 45 வயதிலி­ருந்து  55 வயது வரை மாறு­படும். அதா­வது சிலரில் 45 வயதில் மாத­விடாய் நிரந்­த­ர­மாக நிற்கும். சிலரில் 50 வயதில் நிற்கும். சிலரில் 55 வயதில் நிற்கும். இவ்­வாறு பாரிய வேறு­பா­டுகள் உள்­ளது. எந்த வய­தா­னாலும் மெனோபாஸ் பருவமடைந்து மாத­விடாய் நிரந்­த­ர­மாக நின்று போன பெண்­களில் பல மாதங்­களின் பின்னர் சரி அல்­லது பல வரு­டங்­களின் பின்னர் சரி  மீண்டும் மாத­விடாய் போன்ற இரத்தப் போக்கு ஏற்­பட்டால் அதன் அர்த்தம் என்ன? இது ஒரு பயப்­ப­டக்­கூ­டிய  அல்­லது அச்­சப்­ப­டக்­கூ­டிய ஒரு விட­யமா? 

இவற்­றுக்கும் புற்­று­நோய்­க­ளுக்கும் தொடர்பு உள்­ளதா?  என பெண்கள் மத்­தியில் பல சந்­தே­கங்கள்  ஆரம்­பிக்கும். இவற்­றுக்கு இன்று விடை காண வேண்டும்.  

மெனோபாஸ் பரு­வத்தின் பின்னர் பல வரு­டங்கள் கழித்து மாத­விடாய் போன்ற இரத்தப் போக்கை பல பெண்கள் அச்­சத்­துடன் வைத்­திய ஆலோ­சனையை நாடி வரு­கின்­றனர். இவர்­க­ளுக்கு இந்­நி­லைமை ஏற்­பட என்ன காரணம் எனப்­பார்க்க நாம் பரி­சோ­த­னைகள் மேற்­கொள்­வது வழக்கம். 

இதில் முக்­கி­ய­மாக  செய்­யப்­படும். பரி­சோ­தனை ஸ்கேன் (U.S.SCAN) பரி­சோ­தனை ஆகும். இந்த ஸ்கேன் பரி­சோ­த­னையை முதலில் செய்யும்போது  நாம் முக்­கி­ய­மாக கர்ப்­பப்­பையின் உட்­சுவர் தடிப்பை தான் கணிப்போம். 

இதில் கூடு­த­லான பெண்­களில் தடிப்­பா­னது 5mm க்கும் குறை­வா­கத்தான் இருக்கும். இப்­படி 5mm க்கும் குறை­வாக இருக்கும் போது  கர்ப்­பப்­பையில் ஆபத்­தான நோய்­க­ளுக்கோ அல்­லது புற்று நோய்­க­ளுக்கோ  வாய்ப்­பில்லை என உறு­தி­யாகக் கூறி மேற்­கொண்டு எவ்­வித மேல­திக சிகிச்­சையும்  தேவைப்­ப­டு­வ­தில்லை. 

மெனோபாஸ்  பரு­வத்தின் பின்னர்  இரத்­தப்­போக்கு கண்டு அச்­சத்தில் வந்த பல பெண்கள் இந்த செய்தி கேட்டு மன நிம்­ம­தி­யுடன் வீடு திரும்­பு­கின்­றனர். 

எனவே  மருத்­துவ பரி­சோ­த­னை­யிலும் சரி மருத்­துவ  ஆலோ­ச­னை­யிலும் சரி விடை­கா­ணக்­கூ­டி­ய­தாக உள்­ளது. ஆனால், ஒரு சில பெண்­களில் இந்த விடயம் குறித்து  ஸ்கேன் செய்யும் போது கர்ப்­பப்­பையின்  உட்­சுவர் தடிப்­பா­னது 5mmக்கும் கூடு­த­லாக தடிப்­ப­டைந்து காணப்­ப­டு­கின்­றது. இவற்றை நாம் மேற்­கொண்டு பரி­சோ­தித்து எவ்­வா­றான தடிப்­புக்­கான நோய்க் கார­ணியை கண்­ட­றிய வேண்டும். 

அதா­வது இவர்­களை நாம் சத்­தி­ர­சிகிச்சைக் கூடத்தில்  எடுத்து  ஒரு  சிறிய மயக்­கத்தை கொடுத்து கர்ப்­பப்­பையின் உட்­சுவர் பகு­தியில் ஒரு பகு­தியை  எடுத்து பரி­சோ­த­னைக்கு  அனுப்ப வேண்டும். இதனை D and C  என்றோ வயிறு கழு­வுதல் என்றோ, ஹிஸ்ரஸ் கோப்பி என்றோ அழைக்­கலாம்.  இதன் நோக்கம் உட்­சுவர் தடிப்­பா­னது சில சமயம் புற்று நோயாகக் கூட இருக்க முடி­யுமா எனப் பார்ப்­ப­தே­யாகும். அவ்­வாறு  பரி­சோ­திக்கும்  போது  சிலரில்  பெறு­பேறுகள்  புற்­றுநோய் என கண்­ட­றி­யப்­படும்.  மற்­றை­ய­வர்­களில் இவை எவ்­வித நோயும் இல்லை. வெறும் இழை­யங்கள் என்ற பெறு­பே­று­களே வரு­கின்­றது. 

எனவே இவ்­வாறு இவ்­வி­ட­யத்தை ஸ்கேன் செய்து அதில் சந்­தே­கிப்­ப­வர்­களை வயிறு கழு­வுதல் மூலம் பரி­சோ­தித்து அறிந்தால் சரி­யான சிகிச்சை வழங்க முடியும். 

கர்ப்­பப்பை புற்­றுநோய் என பெறு­பேறு கண்­ட­றிந்தால் அடுத்து செய்ய வேண்­டி­யது கால தாமதம்  இல்­லாமல் அறுவைச் சிகிச்சை மூலம் கர்ப்­பப்பை அகற்­று­வ­தே­யாகும். கர்ப்­பப்பை மற்றும் சூல­கங்கள் அகற்­று­வதன் மூலம் இவ்­வாறு கண்­ட­றி­யப்­படும் கர்ப்­பப்பை புற்று நோய்க்கும் வெற்­றி­க­ர­மாக சிகிச்சை அளிக்­கப்­ப­டு­கின்­றது. 

இத­னை­ய­டுத்து பெரும்­பா­லா­ன­வர்­களில் மேற்­கொண்டு  புற்­று­நோய்க்­கான மேல­திக சிகிச்சை எதுவும் தேவைப்­ப­டு­வ­தில்லை. 

இந்த விட­யத்தில் எனது கடந்த பல வருட அனு­ப­வங்­களை பார்த்தால் மெனோபாஸ் பரு­வத்­திற்கு பின்னர் இரத்­தப்­போக்கு உள்­ள­போது  பாதிக்­கப்­பட்ட பெண்கள் மருத்­துவ  ஆலோ­ச­னைக்கு வரு­வது தாமதம் இல்­லாமல் நடக்­கின்­றது. நாமும் காலத்தை வீண­டிக்­காத ஸ்கேன் பரி­சோ­தனை மூலம் கர்ப்­பப்பை தடிப்பை அளந்து அதற்­கேற்ப அடுத்த கட்ட பரி­சோ­த­னையோ கர்ப்­பப்பை அகற்­றலோ  செய்து இதற்கு முடிவு காண்­கின்றோம். சிகிச்­சை­க­ளிலும் சரி புற்­று­நோயை  குணப்­ப­டுத்­து­வ­திலும் சரி வெற்றி கண்டு சம்­பந்­தப்­பட்­ட­வர்­க­ளுக்கு ஆறுதல் கூறி­னாலும் சுற்­றத்தார் சூழ­வுள்­ளோரும் பல பல அபிப்­பி­ரா­யங்­களை பல­வந்­த­மாக  திணித்து மன­ரீ­தியில் சோர்­வ­டையச் செய்­கின்­றனர். 

அதா­வது மருத்­துவ ரீதியில் செய்ய வேண்­டி­ய­வற்­றை செய்து பாதிக்­கப்­பட்ட பெண்­களை திடப்­ப­டுத்­தி­னாலும் சில­ரது அபிப்­பி­ரா­யங்கள் கேட்டு மனச்­சோர்வும் நிம்­ம­தி­யற்ற தன்­மையும் ஏற்­ப­டத்தான் செய்­கின்­றது. எனவே சுற்­றத்­தா­ரையும் சூழ­வுள்­ளோ­ரையும் நாம் கேட்டுக் கொள்­வது நோயில் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளையும்  சிகிச்­சை­களில் உள்­ள­வர்­க­ளையும் மனம் புண்­ப­டாத அள­வோடு பேசி அவர்­களை உற்­சா­கப்­ப­டுத்தி நம்­பிக்­கை­யூட்ட வேண்டும் என்பதே. 

மருத்­துவ ஆலோ­சனைப் படி கேட்­பதா அல்­லது உங்­க­ளது அபிப்­பி­ரா­யங்­களின் படி நடப்­பதா என்ற ஒரு தர்ம சங்­கட நிலமையை  ஏற்படுத்தாதவாறு நடக்க வேண்டிய  பொறுப்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் உள்ளது. 

எனவே மெனோபாஸ் பருவத்தில் மாதவிடாய் நிரந்தரமாக நிற்க வேண்டும். இவ்வாறு நின்று மீண்டும் ஆரம்பித்தால்  இதனை அலட்சியப்படுத்தாது வைத்திய ஆலோசனை பெறவேண்டும். நோய் என்று கண்டறிந்தாலும் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஏனெனில் வெற்றிகரமான சிகிச்சையில் புற்று நோயாகக் கூட இருந்தாலும் வெற்றி கொண்டு ஆரோக்கியமாக வாழ முடியும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29