கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பு ; 6 பேர் கைது

Published By: Digital Desk 3

26 Nov, 2022 | 03:56 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

மேல் மாகாணத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் நேற்று (25) குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மேல்மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் 6 பேரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிரிபத்கொடை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில்  கடைத்தொகுதி ஒன்றில் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த 222,000 ரூபா பெறுமதியான சொத்துக்களை கொள்ளையிட்டமை, கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள அரச பாடசாலையில் அத்துமீறி நுழைந்து 450,000 ரூபா பெறுமதியான 3 கணனிகளை திருடியமை மற்றும் கிராண்ட்பாஸ் பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான வாகனமொன்றின் 50,000 ரூபா பெறுமதியான பேட்டரி திருடியமை போன்ற கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்டவர்கள் 24, 32, 33, 42, 43 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் வெல்லம்பிட்டிய, சேருநுவர, நிகவெரட்டிய மற்றும் கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கிராண்ட்பாஸ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31