பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக நீர்கொழும்பில் கையெழுத்து வேட்டை

26 Nov, 2022 | 02:56 PM
image

(நீர்கொழும்பு நிருபர் எம். இஸட். ஷாஜஹான்)

சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம்  இன்று சனிக்கிழமை (26)  நீர்கொழும்பு ரயில் நிலையம் முன்பாக வார இறுதி  சந்தைக்கு அருகில்  பொருளாதார நெருக்கடி மற்றும் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராக கையெழுத்து பெறுதல் மற்றும் துண்டுப் பிரசுர விநியோக நடவடிக்கையை மேற்கொண்டது. 

இந்நிகழ்வு இன்று (26) முற்பகல் 11.00 மணி அளவில்ஆரம்பமானது.

அரசாங்கத்துக்கு எதிராக கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்த அமைப்பினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுர விநியோகத்தை மேற்கொண்டதுடன்  மக்கள் எதிர்நோக்கும் பொருளாதாரப் பிரச்சினை தொடர்பாகவும் விலைவாசி அதிகரிப்பு தொடர்பாகவும் ஒலிபெருக்கி மூலம் விளக்கம் அளித்தனர்.

அத்துடன் இது தொடர்பாக தயாரிக்கப்பட்டிருந்த பதாதையில் பொதுமக்களின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டனர்.

அதிக எண்ணிக்கையான பொதுமக்கள் இந்த பதாதையில் கையெழுத்திட்டனர்.

சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்க  அமைப்பினர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00