திருகோணமலை, நாவற்சோலைக் கிராமத்தில்; சூதாட்டத்தில் ஈடுப்பட்ட 08 பேரை இன்று அதிகாலை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 

வீடொன்றில் சூதாட்டத்தில் ஈடுப்படுவதாக பொலிஸாருக்கு தொலைபேசி மூலமாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது நாவற்சோலை முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த 8 சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

பிறகு இந்த 08 பேருக்கும் பொலிஸால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் 06ஆம் திகதி குச்சவெளி சுற்றுலா நீதிமன்றத்தில் இவர்களை ஆஜராகுமாறும் பொலிஸார் உத்தரவிட்டனர்.