20 வருடங்களில் 2 இலட்சத்திற்கு மேற்பட்ட மிதிவெடிகள், ஒரு மில்லியன் வரையான வெடிபொருட்கள் அகற்றல் - ஹலோ ட்ரஸ்ட்டின் திட்ட முகாமையாளர் ஸ்டீபன் ஹால்

Published By: Nanthini

26 Nov, 2022 | 11:53 AM
image

லங்கையில் ஹலோ ட்ரஸ்ட் கண்ணிவெடி அகற்றும் நிறுவனமானது கடந்த 20  வருடங்களில் 2 இலட்சத்து 70 ஆயிரம் மிதிவெடிகள் மற்றும் ஒரு மில்லியன் வரையான  வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஹலோ ட்ரஸ்ட் திட்ட முகாமையாளர் ஸ்டீபன் ஹால் தெரிவித்துள்ளார். 

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமான ஹலோ ட்ரஸ்ட், இலங்கையில் கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஆரம்பித்து, 20 ஆண்டுகளை நேற்று முன்தினம் வியாழக்கிழமை (நவ 24) நிறைவு செய்துள்ளது. 

இதனையொட்டி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளதாவது, 

கண்ணிவெடி அகற்றும் பணிகளை ஆரம்பித்த ஹலோ ட்ரஸ்ட் நிறுவனம் 20ஆம் ஆண்டினை  நிறைவு செய்துள்ளது. 

ஹலோவானது இலங்கையில் மிகப்பெரிய மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் நிறுவனமாகும். 

இதில் 1300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 40 வீதமானோர்  பெண்கள் ஆவர். 

மனிதவலு முறை கண்ணிவெடி அகற்றும் அணிகள், கருவிகள் மற்றும் கவசமிடப்பட்ட இயந்திரங்கள் போன்றவற்றை கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடிகளை அகற்றுவதற்காக பயன்படுத்துகின்றது. 

ஹலோவின் அணிகள் கடுமையான உழைப்பினால் கண்ணிவெடிகள் மற்றும் வெடிக்காத வெடிபொருட்களை அகற்றி, மக்கள் பாதுகாப்பாக அவர்களின் இடங்களுக்கு திரும்பவும், அவர்கள் தங்களது நிலங்களில் விவசாயம் செய்யவும் வழிவகுத்து வருகின்றன. 

இந்த 20 ஆண்டுகளில் ஹலோவின் நடவடிக்கைகள் மூலம் 114 km2 நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது. இது 6700 கிரிக்கெட் மைதானங்களுக்கு சமனாகும்.

மேலும், 2,70,000 மிதிவெடிகள் மற்றும் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் வெடிபொருட்கள் அழிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 2 இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் அவர்களது வாழ்விடங்களுக்கு திரும்பியுள்ளனர்.

கடந்த 2017 டிசம்பரில் சர்வதேச கண்ணிவெடி தடை ஒப்பந்தத்தில் இலங்கை இணைந்துள்ளது. அந்த ஒப்பந்தம் 2018இல் நடைமுறைக்கு வந்ததிலிருந்து 2028ஆம் ஆண்டளவில் அறியப்பட்ட கண்ணிவெடி பிரதேசங்களை துப்பரவு செய்ய இலங்கை அரசு உறுதி பூண்டுள்ளது. 

இந்த  இலக்கை அடைவதற்கு இலங்கை அரசுக்கு உதவுவதற்காக ஹலோ, உயிர் காக்கும் தனது பணியை தொடர உறுதி கொண்டுள்ளது.

இலங்கை அரசு இந்த இலக்கினை எட்டுவதற்கு உதவி செய்யும் நோக்கில் நாங்கள் எங்களை அர்ப்பணித்துள்ளோம். 

இலக்கு அடையப்படும் வரை எங்கள் மிதிவெடி அகற்றும் அணிகள் பணிபுரியும். 

இலங்கையானது கண்ணிவெடிகளற்ற நாடாக அறிவிக்கப்பட்டவுடன், வெற்றிகரமான எதிர்காலத்துக்கு தேவையான திறன்களை எமது அனைத்துப் பணியாளர்களும் பெற்றிருப்பதை உறுதிசெய்ய, நாம் தேசிய மிதிவெடி நடவடிக்கை மையம் மற்றும் ஏனைய கண்ணிவெடி அகற்றும் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-16 11:56:52
news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51