ஆப்கானிஸ்தானிடம் சொந்த மண்ணில் மண்டியிட்டது இலங்கை 

26 Nov, 2022 | 07:26 AM
image

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டியில்  ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

கண்டி பல்லேலயில் இடம்பெற்ற முதல் ஒருநாள் 50 ஓவர்கள் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 294 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

ஆப்கானிஸ்தான் அணி சார்பாக சிறப்பாக துடுப்பெடுத்தாடிய இப்ராகிம் சந்ரான் 106 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார். மற்றும் குர்பாஸ் 53 ஓட்டங்களையும் ரஹ்மத் ஷா 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணிசார்பாக வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

295 ஓட்டங்களைப் பெற்றால் வெற்றி என்ற இலக்குடன் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 60 ஓட்டங்களால் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் துடுப்பாட்டத்தில் பெதும் நிசங்க 83 ஓட்டங்களையும் வனிந்து ஹசரங்க 66 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் பந்துவீச்சில் பஸ்லாஹ் பரூக்கி 4 விக்கெட்டுகளையும் நயீப் 3 விக்கெட்டுகளையும் அஹமட்சயி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இரு அணிகளுக்கும் இடையிலான 2 ஆவது ஒருநாள் போட்டி பல்லேகலயில் 27 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58