டி.ஏ.ராஜபக்ஷவின் 55 ஆவது நினைவு தினம்

Published By: Nanthini

25 Nov, 2022 | 06:56 PM
image

றைந்த டி.ஏ. ராஜபக்ஷவின் 55ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று வியாழக்கிழமை (நவ 24) பிற்பகல் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஜனாதிபதி ரணிலின் பங்குபற்றலுடன், விசேட நினைவேந்தல் உரை இடம்பெற்றது.

ராஜபக்ஷ ஞாபகார்த்த கல்வி, கலாசார மற்றும் சமூக சேவைகள் அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வு மகா விகாரையின் இலங்கை ராமன்ய மஹா நிகாயாவின் அனுநாயக்க மினுவாங்கொட பத்தடுவன பிக்கு பயிற்சி நிலையத்தின் நெதகமுவே விஜய மைத்திரி தேரர் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது மலேசியாவின் கோலாலம்பூர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சமித ஹெட்டிகே, 'ஒரே திசை ஒரே பாதை நிலை பேண்தகு அபிவிருத்திக்கான பாடங்கள்' என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். 

தொடர்ந்து நினைவேந்தல் உரை உள்ளடங்கிய புத்தகம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

கொழும்பு புதிய நகர மண்டபத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள டி.ஏ. ராஜபக்ஷவின் சிலைக்கு சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிரதமர் தினேஷ் குணவர்தன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரியின் கணித விஞ்ஞான...

2024-03-26 12:23:52
news-image

காசாவுக்காக உதவுத் தொகையை கையளித்த கல்முனை...

2024-03-26 14:32:06
news-image

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான மஹா...

2024-03-26 17:12:51
news-image

சாவகச்சேரி மண்டுவில் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில்...

2024-03-25 18:26:22
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் சர்வதேச ஆய்வு மாநாடு 

2024-03-25 21:19:22
news-image

கொழும்பு டொரிங்டன் ஸ்ரீ முருகன் ஆலயத்தின்...

2024-03-25 17:55:59
news-image

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்ற அட்டன் ஸ்ரீ...

2024-03-25 10:46:56
news-image

அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தான இராஜகோபுர...

2024-03-24 17:21:06
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்றம் 

2024-03-24 13:19:05
news-image

யாழ். பண்பாட்டு மையத்தில் ஆடல் அரங்கம்

2024-03-23 17:52:56
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் அறிவோர் ஒன்றுகூடல்...

2024-03-23 17:34:20
news-image

திருக்கோணேஸ்வரர் ஆலய பிரமோற்சவம் நாளை கொடியேற்றத்துடன்...

2024-03-23 17:09:35