(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போகாவத்தை, கெலிவத்தை, திம்புள்ள ஆகிய தோட்டப்பகுதிகளைச் சேர்ந்த 300ற்கும் மேற்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அங்கத்தவர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்தில் இன்று உத்தியோகபூர்வமாக  இணைந்துள்ளனர்.

தமக்கான காணி பிரச்சினை, வீட்டு பிரச்சினை உள்ளிட்ட ஏனைய அடிப்படை பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதற்காக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக  தீர்த்துக் கொள்வதற்காக ஒருமுகப்பட்ட ரீதியில் இத் தோட்ட தொழிலாளர்கள் தாம் இதுவரை அங்கம் வகித்த கட்சிகளிலிருந்து விலகி தொழிலாளர் தேசிய சங்கத்தில் இணைந்து கொள்­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

இது தொடர்­பான கலந்­து­ரை­யா­ட­லொன்று இன்று காலை போகாவத்தை கலாசார மண்டபத்தில்  அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ்  , தொழிலாளர் தேசிய சங்கத்தின் முக்கியஸ்தர்கள் உட்­பட புதிய அங்கத்தவர்களாக இணைந்துக் கொள்ளும் தொழிலாளர்களுடன் இடம்­பெற்­றமையும் குறிப்­பி­டத்­தக்கது. இதன்­போதே 300 புதியஅங்­கத்­த­வர்கள் தொழிலாளர் தேசிய சங்கத்திற்கு ஆத­ர­வினை வழங்­கு­வ­தாக உறு­தி­ய­ளித்­துள்­ளனர்.