இன்று சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினம்: சட்டங்களில் அங்கீகாரமும் நடைமுறையில் தோல்வியும்

Published By: Nanthini

25 Nov, 2022 | 09:21 PM
image

ட்டத்தின் பிரகாரம், 'சட்டத்தின் முன் யாவரும் சமம்' ஆயின் பெண்களுக்கு மாத்திரம் சிறப்பு உரிமைகளையும் பாதுகாப்பையும் கொடுப்பதற்கு சட்டம் ஏன் முனைகிறது என்கிற வினா எழும்புகின்றது. 

சட்டத்தால் கட்டுப்படுத்தப்பட முடியாத நிலையில் உலகெங்கும் வாழும் பெண்கள் பல்வேறுபட்ட வன்முறைகளை எதிர்கொள்கின்றனர் என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.

டொமினிக்கன் குடியரசில் மறக்கமுடியாத பட்டாம்பூச்சிகளாக கொள்ளப்படும் மிராபெல் சகோதரிகள் எனும் மூன்று சகோதரிகள் தமது அரசியல் செயற்பாட்டுக்காக 1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25ஆம் திகதியாகிய இதே நாளில்தான் அந்நாட்டின் ஆட்சியாளர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள். 

அவர்கள் முழுதேசத்தினுடைய பெண்கள் வன்முறையின் சின்னமாக மாறினார்கள். அவர்களை நினைவுபடுத்தும் வகையில் 1999ஆம் ஆண்டு இத்தினத்தை வருடந்தோறும் 'சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு தினமாக' கொண்டாடுவதற்கு தீர்மானித்தது.

இது தவிர உலகளாவிய ரீதியில் பெண்களுக்கான வன்முறைகளை ஒழிப்பதற்கு பல்வேறு விதமான சட்டங்கள் உருவாக்கப்பட்டன. அவை பற்றிய அடிப்படை அறிவினை பெண்கள் மட்டமல்லாமல் அனைவரும் பெற்றுக்கொள்ள வேண்டும். 

பெண்களுக்கான பட்டயத்தின் (women’s charter) முன்னுரையில் பாலினம் தொடர்பான வன்முறையானது மனித உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தை மீறலாகவும், அதனை அனுபவிப்பதற்கு தடையாகவும் கருதப்படுகிறது. 

இதன் உறுப்புரை 16 பெண்கள் பால் சம்பந்தமான வன்முறையிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான உரிமையை பெண்களுக்கு வழங்குகின்றது. 

மேலும், சிறுவர் உரிமைக்கான பட்டயம் என்பது பெண்கள் மற்றும் சிறுவர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டது. 

உறுப்புரை 2(a)இன் பிரகாரம், பால் தொடர்பான வேறுபாடுகளிலிருந்து சிறுவர்கள் பாதுகாக்கப்பட்டு அவர்களது உரிமைகள் மதிக்கப்பட வேண்டும். 

மேலும், ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயம் (UN charter), பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கும் பிரகடனம் (Declaration on the Elimination of Violence Against Women) (DEVAW), சிறுவர் உரிமை சமவாயம் (CRC), பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான சர்வதேச உடன்படிக்கை (CEDAW), பீஜிங் பிரகடனம் மற்றும் நடைமுறைக்கான அடித்தளம் (Beijing declaration and platform for action), மனித உரிமைக்கான சர்வதேச பிரகடனம் (UDHR),  சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை (ICCPR), வியன்னா பிரகடனம் மற்றும் நடைமுறைக்கான வேலைத்திட்டம் என்பனவும் பெண்களின் உரிமையை பாதுகாப்பதற்கு உரிய ஏற்பாடுகளை கொண்டுள்ளது. 

இவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயமானது (UN CHARTER) ஆண்கள் மற்றும் பெண்களின் சமத்துவத்தினையும் கௌரவத்தினையும் மனித பெறுமதியினையும் மனித உரிமைகளையும் பாதுகாக்கின்ற சட்டமாக உள்ளது. 

பெண்களுக்கெதிரான வன்முறைகளை ஒழிக்கும் பிரகடனமானது (DEVAW) பெண்களுக்கெதிரான வன்முறையானது பெண்களின் உரிமைகள் மற்றும் அடிப்படை சுதந்திரத்தினை மீறுகிறது என உறுதிப்படுத்துகிறது. 

இப்பிரகடனமானது பெண்களுக்கெதிரான வன்முறையினை தடுப்பதற்கான நடவடிக்கையினையும் குற்றவியல் குடியியல் மற்றம் ஏனைய நிர்வாகத்துறை தண்டனையையும் ஊக்குவிக்கிறது. 

சிறுவர் உரிமை சமவாயமானது (CRC)  சிறுவர்கள் பாலியல் தொந்தரவுகளில் இருந்து பாதுகாப்பு பெறும் உரிமையை வலியுறுத்துகிறது. 

மேலும், பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாரபட்சங்களையும் களையும் சமவாயமானது (cedaw) பெண்களின் முன்னேற்றங்களை உறுதிப்படுத்துகிறது. இச்சமவாயத்தின் உறுப்புரை 01 பெண்களுக்கெதிரான வன்முறையானது ஒருவகை வேறுபாடாக சுட்டுகிறது. 

பெண்களுக்கான பட்டயத்தின் முன்னுரையில் பாலினை அடிப்படையாகக் கொண்ட தொல்லையானது பெண்களின் அடிப்படை சுதந்திரம், மனித உரிமைகளை மீறுவதாகவும், உரிமைகளை அனுபவிப்பதற்கான தடையாகவும் அமைகிறது என குறிப்பிடுகின்றது. இது எல்லா இடங்களிலும் பெண்களின் சமத்துவத்தை அங்கீகரிக்கின்றது.

சமவாயத்தின் உறுப்புரை 2இல் பொது நிர்வாகத்துறையும் நிறுவனங்களும் பெண்களுக்கெதிரான வேறுபாட்டினை உடைய நடைமுறைகளை மாற்றியமைக்கவும் நீக்கவும் உடனடியாக தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என குறிப்பிடுகின்றது.

பீஜிங் பிரகடனம் மற்றும் நடைமுறைக்கான அடித்தளம் எனும் இப்பிரகடனமானது பாலியல் துன்புறுத்தல் பெண்களுக்கெதிரான ஒருவகை வன்முறை, ஒருவகையான வேறுபாடு என்பதை உறுதிப்படுத்துகின்றது. 

இது அரசாங்கமானது பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக சட்டங்களை உருவாக்குகிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக அரசாங்கம் தொழிலாளர்கள் சங்கங்கள் குடியியல் சமூகங்களை ஒருங்கிணைத்து கண்காணிக்க தூண்டுகிறது. 

இவ்விடயம் இப்பிரகடனத்தின் 478ஆவது பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், மனித உரிமைக்கான சர்வதேச பிரகடனம் (UDHR) என்பதில் உறுப்புரை 01இல் எல்லா மனித உயிர்களும் சம கௌரவத்தையும் உரிமைகளையும் உடையவர்கள் என குறிப்பிடுகின்றது.

உறுப்புரை 02இல் ஒவ்வொரு மனிதனும் மனித உரிமைகளையும் சுதந்திரத்தையும் எந்தவித பால் வேறுபாடுகளோ அல்லது வேறு பாகுபாடுகளோ இன்றி பெறுவதற்கு தகுதியுடையவர்கள் என்கிறது.

உறுப்புரை 03இல் ஒவ்வொரு மனிதனும் வாழ்வதற்கான உரிமை மற்றும் சுதந்திரம், தனிமனித பாதுகாப்பு என்பவற்றுக்கு உரித்துடையவன் என்கிறது.

உறுப்புரை 05இல் எவரும் சித்திரவதை, கொடிய மனிதத்தன்மை இன்றிய நடவடிக்கைகளுக்கும் தண்டனைகளுக்கும் உள்ளாக்கப்படக்கூடாது எனவும் கூறுகிறது.

மேலும், சர்வதேச குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையில் உறுப்புரை 26 சமத்துவத்துக்கான உரிமையை வலியுறுத்துகிறது.

மேலும், உறுப்புரை 7இல் சித்திரவதை கொடிய மனிதத்தன்மை இன்றிய நடவடிக்கைகளிலிருந்து விடுபடுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அத்துடன், உறுப்புரை-09 ஒவ்வொரு மனிதரினதும் சுதந்திரம் மற்றும் பாதுகாப்புக்கான உரிமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மேலும், வியன்னா பிரகடனம் மற்றும் நடைமுறைக்கான வேலைத்திட்டத்தில் உறுப்புரை 18, பெண்களின் மனித உரிமையானது சர்வதேச மனித உரிமைகளிலிருந்து மீளப்பெற முடியாது. ஒருங்கிணைந்த, பிரிக்கப்பட இயலாததாக உள்ளது. 

எல்லா வகையான பாலியல் துன்புறுத்தல்களும் மனித கௌரவத்துடனும் மனித பெறுமதியுடன் ஒப்பிட முடியாததாக உள்ளதால் அது முற்றாக களையப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தவிர இலங்கையின் உள்நாட்டுச் சட்டத்திலும் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரை 12(2) பாலினை அடிப்படையாகக் கொண்டு எந்தவொரு வேறுபாடுகளும் காட்டக்கூடாது என்கிறது. 

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 12(1)இன்படி, சட்டத்தின் முன்பு ஆட்கள் எல்லோரும் சமமானவர்கள், அவர்கள் சட்டத்தினால் சமமாக பாதுகாக்கப்படுவதற்கு உரித்துடையவர்கள் என கூறப்படுகிறது. 

உறுப்புரை 12(2)இன் படி இனம், மதம், மொழி, சாதி, பால், அரசியல் கொள்கை அல்லது பிறப்பிடம் காரணமாக அல்லது அத்தகைய காரணங்களுள் எந்த ஒன்று காரணமாகவும் எந்த பிரஜையும் ஓரங்கட்டப்படல் ஆகாது.

12(3)இன் படி எந்த நபரும் இனம், மதம், மொழி, சாதி, பால் காரணமாக அல்லது இத்தகைய காரணங்களுள் எந்த ஒன்றின் காரணமாக கடைகள், பொது உணவுச் சாலைகள், விடுதிகள், பொது களியாட்ட விடயங்கள் தனது மதத்துக்குரிய பொது வழிபாட்டிடங்கள் என்பவற்றுக்கு செல்வது தொடர்பில் ஏதேனும் தகுதியீனத்துக்கு, பொறுப்புக்கு மட்டுப்பாட்டுக்கு அல்லது நிபந்தனைக்கு உட்பட்டவராதல் ஆகாது.

மேலும், உறுப்புரை 12(4)இன்படி, இவ்வுறுப்புரையில் உள்ள எதுவும் பெண்களின், பிள்ளைகளின் அல்லது இயலாமையிலுள்ள ஆட்களின் முன்னேற்றத்துக்காக சட்டத்தின் மூலம் துணைநிலைச் சட்டவாக்கத்தின் மூலம் அல்லது ஆட்சித்துறை நடவடிக்கை மூலம் சிறப்பேற்பாடு செய்வதை தடுத்தலாகாது; பெண்கள் போன்றவர்களின் உரிமைகளையும் உறுதிப்படுத்துவதற்கான சட்டங்களை இயற்றமுடியும் என கூறுவதன் மூலம், மேற்குறிப்பிட்ட உறுப்புரைகளினூடாக பெண்களுக்கான பால்நிலை சமத்துவத்தை இலங்கையின் அரசியலமைப்பு உறுதிப்படுத்துகிறது.

அரசியலமைப்பில் இவ்வாறான பரிந்துரைப்புக்கள் இருப்பினும், பெண்கள் இன்றைய நிலையில் சமத்துவத்தை அனுபவிப்பது என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

(Coomara Swamy 1990, 119 – 51, jayawardena 1986,109 – 36, law and Society Trust Review 16 June 1992 7 – 9, United Nation 1987 73 – 79) சட்டங்கள் அழகாக புத்தகப் பக்கங்களில் குறித்து வைக்கப்பட்டிருப்பினும், நடைமுறையில் அது எவ்வளவு தூரம் வினைதிறனாக செயற்படுகின்றது என்பது வினாவே. 

வீட்டில் முடங்கியிருக்கும் பெண் முதல் விண்வெளி சென்றுவரும் பெண் வரை வன்முறைகளுக்கு ஆளாகி வருகிறார்கள் என்பது நிதர்சனமே.

பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிப்பது என்பது வீடுகளில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும். 

பெண்பிள்ளைகள் கைகளில் தும்புத்தடியையும் ஆண்பிள்ளைகளின் கைகளில் தொலைபேசியையும் திணிக்கும் பெற்றோர் விழித்தெழ வேண்டும். 

ஆணுக்கு மீனும் முட்டையும், பெண்ணுக்கு புட்டும் வெறும் சட்டியையும் சாதாரணமாக ஒதுக்கிவைக்கும் அம்மாக்கள் சிந்திக்க வேண்டும்.

வீட்டில் கள்ளனை வைத்துக்கொண்டு அந்நியன் மீது குற்றம் சுமத்தக்கூடாது. 

அதுபோலவே வீட்டிலே பெண்களை சுதந்திரமாகவும் காத்திரமாகவும் செயற்பட அனுமதிக்காமல், வெளியுலகையும் சட்டத்தையும் குறை கூறி பயனில்லை.

ஆகவே, எழுத்திலுள்ள சட்டத்தை நிதர்சனமாக்கி பெண்பிள்ளைகளின் உரிமைகளை அனுபவிக்க வழிசெய்வோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மோடி சூட்டிய பெயர் அங்கீகரிப்பு

2024-03-28 18:11:54
news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

வரலாற்றில் முதல் முறையாக... சவூதியில் ஒரு...

2024-03-28 18:03:05
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04