வரலாற்றில் இன்று - மிரபால் சகோதரிகள் கொல்லப்பட்ட தினம்

Published By: Rajeeban

25 Nov, 2022 | 01:00 PM
image

1960ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் திகதி டொமினிகன் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ரபேல் ட்ருஜிலோவின் அரசாங்கத்தை எதிர்த்த மூன்று சகோதரிகள் படுகொலை செய்யப்பட்டனர்.

'மிரபால் சகோதரிகள்' என அழைக்கப்பட்ட நான்கு சகோதரிகளில் மூவர் டொமினிகன் குடியரசின் முன்னாள் ஜனாதிபதி ரபேல் ட்ருஜிலோவின் அரசாங்கத்தை எதிர்த்ததுடன், அதற்கு எதிரான இரகசிய நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

அதனால் இந்த மூன்று சகோதரிகளும் ஈவிரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்டனர். அவர்கள் தாக்குதலுக்கு உட்பட்டு கொலை செய்யப்பட்ட பின்னர், அவர்கள் உள்ளிருந்த கார் மலையுச்சியிலிருந்து தள்ளிவிடப்பட்டது. கொலையை விபத்து என காண்பிப்பதற்காக இவ்வாறு செய்தனர்.

ஆனால், டொமினிகன் குடியரசின் ஜனாதிபதி ரபேல் ட்ருஜிலோவின் அரசாங்கம் எதிர்பார்த்தமைக்கு மாறாக, இது பாரிய மக்கள் புரட்சியை தோற்றுவித்து, பின்னர் அரசாங்கமே பதவியிலிருந்து விலக்கப்பட்டது.

அந்த சகோதரிகள் நால்வரில் உயிருடன் தப்பிய ஒரு சகோதரி நடந்த சம்பவத்‍தை வெளியுலகுக்கு தெரிவித்தார்.

மிர்பால் சகோதரிகளின் படுகொலை பின்னர் அவர்களை ஒடுக்குமுறைக்கும் பெண் அடிமைத்தனத்துக்கும் எதிரான போராட்டத்தின் குறியீடாக மாற்றியது.

அந்த மூன்று சகோதரிகளும் கொல்லப்பட்ட நாளை குறிக்கும் விதத்தில் 1999ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபை நவம்பர் 25ஆம் திகதி பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினமாக பிரகடனம் செய்தது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right