கோட்டா அடிக்கடி கேட்டதனால் தான் நான் கடிதம் எழுதினேன் - சஜித் விளக்கம்

Published By: Digital Desk 5

25 Nov, 2022 | 01:33 PM
image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரைஹஷான்)

நாட்டின் பிரதமர் பதவியை ஏற்றுக்காெள்ளுமாறு கோட்டாபய ராஜபக்ஷ் அடிக்கடி கோரி வந்ததாலேயே எமது கூட்டணியின் இணக்கப்பாட்டில் நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள தயார் என தெரிவித்தோம். அவ்வாறு இல்லாமல் கேட்டுச்செல்லவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) விசேட கூற்றொன்றை முன்வைத்து கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு நான் அனுப்பிய கடிதம் தொடா்பில் சபையில் திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன, குறித்த கடிதம் நான் தனியாக எழுதியது அல்ல. எமது பாராளுமன்ற குழு மற்றும் எமது கூட்டணியின் புரிந்துணர்வுடன் எழுதப்பட்ட கடிதமாகும். 

நாட்டின் பிரதமர் பதவியை பொறுப்பெடுக்குமாறு முன்னாள் ஜனாதிபதி கடிதம் மூலமும் வேறு தகவல்கள் ஊடாகவும் அடிக்கடி வேண்டிக்கொண்டிருந்தார்.

அவரின் இந்த கோரிக்கைக்கு வாய்மூலம் பதில் வழங்குவதைவிட எழுதுமூலம்  வழங்குவத சிறந்தது என நினைத்தே கடிதம் எழுதினோம்.

அத்துடன் இடைக்கால அரசாங்கம் அமைப்பதற்கு 4நிபந்தனைகளை கடிதத்தில் குறிப்பிட்டிருந்தோம். அதாவது, குறிப்பிட்ட கால வரையறைக்குள் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதற்கு இணங்கவேண்டும். 

இரண்டு வாரங்களுக்கு அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் அரசியலமைப்பி 19ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்தவேண்டும். 

எங்களால் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் 21ஆம் திருத்தம் ஊடாக நிறைவேற்று ஜனாதிபதி அதிகாரத்தை இல்லாதாெழிப்பதற்காக  குறிப்பிட்ட காலத்துக்குள் அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன் செயற்படுத்த இணங்கவேண்டும் மற்றும்  மக்களின் வாழ்வாதாரத்தை சுமுகமான நிலைக்குகொண்டுவந்து சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்திக்கொண்டு, குறிப்பிட்ட அரசியலமைப்பு திருத்தத்தை மேற்கொண்ட பின்னர் நிலையான அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்த மக்களுக்கு சந்தர்ப்பம்  வழங்குவதற்காக பாராளுமன்ற தேர்தலை நடத்த இணக்கம் தெரிவிக்கவேண்டும் என்ற மககள் மயமிக்க இந்த 4 நிபந்தனைகளையுமே முன்வைத்தோம்.

அவ்வாறு இல்லாமல் எனக்கு பிரதமர் பதவியை வழங்குமாறு நான் கேட்டுச்செல்லவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இரு பெண்களின் சடலங்கள் வீட்டிலிருந்து மீட்பு...

2024-04-18 09:45:24
news-image

யாழ்ப்பாணத்தில் கசிப்பினை பொதி செய்துகொண்டிருந்த பெண்...

2024-04-18 08:47:07
news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41